Friday, 5 June 2020

பட்டினத்தார்- இறந்தகாலத்திரங்கல்.

பட்டினத்தார்- இறந்தகாலத்திரங்கல்.


வார்த்தைத்  திறமில்லா மனிதருக்கு
பின்சொல்லா சாத்திரங்கள் சொல்லித்
சதிர் இழந்து ......கெட்டேனே .... !

மெத்த மெத்த செல்வாக்கில்
வேறு மருளடுத்து
தத்தித் தலைகீழாய்த்
தானடைந்து  .... கெட்டேனே !!

வழக்கத் தலங்களிலும்
மண் பெண் பொன்னாசையினும்
பழக்கம் தவிராமல் 
பதி இழந்து ...  கெட்டேனே !

ஆணிப் ப்ருந்தும் 
அரும் பூமி அத்தனையும்
காணி நமதென்று 
கனம் பேசி  .... கெட்டேனே !!

ஆசாரமில்லா
அசடருடன் கூடிப்
பாசாங்குப் பேசி
பதி இழந்து  ..... கெட்டேனே !!

குரு மார்க்கமில்லாக்
குருடருடன் கூடிக்
கரு மார்க்கத்துள்ளே 
கருத்தழிந்து  ..... கெட்டேனே ... !!

ஆலம் அருந்தும்
அரன் பெருமை எண்ணாமல்
பாலர் பெண்டிர் மெய்யென்று
பதி இழந்து ......  கெட்டேனே  !!

பிண வசமுற்ற 
பெருங்காயம் மெய்யென்று
பண வாசையாலே 
பதி இழந்து  .... கெட்டேனே ... !!

கண்ட  புலவர்
கனக்கவே தாம் புகழ
உண்ட உடம்பெல்லாம்
உப்பரித்துக் .... கெட்டேனே  !!

எண்ணிறந்த சென்மம் எடுத்தும்
சிவ பூசைப் பண்ணி பிழையாமல்
பதி இழந்து ... கெட்டேனே !!

சிற்றெறும்பு
சற்றும் தீண்டப்பொறா உடம்பை
ஊற்ருருகவும், சுடவும்
ஒப்பித்து ... மாண்டேனே !!!

தன்னுடம்பு 
தானே தனக்குப் பகையாம்
என்று எண்ணும் உணர்வில்லாமல்
இன்பமென்று .... மாண்டேனே !!

தோலெலும்பும் மாங்கிசமும் 
தொல்லன்னத்தால் வளரும்
மேலெலும்பும் சுற்றமென்று
வீறாப்பாய் .... மாண்டேனே !!!

போக்கும் வரத்தும்
பொருள்வரத்தும் காணாமல்
வாக்கழிவு சொல்லி 
மனமறுகிக் ..... கெட்டேனே  ... !


ஹரி ஓம் !!






No comments:

Post a Comment