Saturday, 6 June 2020

ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டோத்திரம் ( 3 )

ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டோத்திரம்.
{தமிழ் விளக்கத்துடன்}*

19. ஓம் தேவசேனாபதயே நமஹ: -
தேவசேனையின் {தெய்வானையின்} கணவர்.
20. ஓம் ப்ராஜ்ஞாய நமஹ: -
ஆத்ம ஞானத்தின் வடிவமாக இருப்பவர்.
21. ஓம் கிருபானவே நமஹ: -
பெரிதும் தயையும் கருணையும் மிக்கவர்.
22. ஓம் பக்தவத்ஸலாய நமஹ: -
பக்தர்களிடம் பெரிதும் அன்புள்ளவர்.
23. ஓம் உமாஸுதாய நமஹ: -
உமாதேவியின் புதல்வர்.
24. ஓம் சக்திதராய நமஹ: -
சிவசக்தி ஜோதியில் பிறந்து அசுரர்களை கொல்லும் வலிமைக்கும், ஞானத்திற்கும் இருப்பிடமானவர்.
25. ஓம் குமாராய நமஹ: -
சிவனுக்கும் பார்வத்க்கும் மத்தியில் செல்லக் குழந்தையாக இருப்பதால் குமாரன் எனப்படுவர்.
26. ஓம் க்ரௌஞ்சதாரணாய நமஹ: -
க்ரௌஞ்ச மலையைப் பிளந்தவர்.
27. ஓம் ஸேனான்யே நமஹ: -
தேவர்களின் படைத் தலைவர்.

தொடரும் ....

No comments:

Post a Comment