Thursday, 4 June 2020

பட்டினத்தார் - முதல்வன் முறையீடு ( 4 )

பட்டினத்தார் பாடல்கள் 

முதல்வன் முறையீடு ( 4 )


அச்சம் ஆங்காரம் 
அடங்கேனே என்குதே...
கைச்சு மின்னு மானம்
கழலேனே என்குதே !!

நீர்க்குமிழியாம் உடலை 
நித்தியமாய் எண்ணுதே....
ஆர்க்கும் உயிராசை 
அழியேனே என்குதே  .. !

கண்ணுக்குக் கண்ணெதிரே
கட்ட்டையில் வேகக் கண்டும்...
என்றும் திரமாய்
இருப்போம் என்றெண்ணுதே ... !

அநித்தியத்தை நித்தியமென்று
ஆதரவாய் எண்ணுதே....
தனித்திருக்கேன் என்குதே...
தனை மறக்கேன் என்குதே !!

கன்னி வன நாதா .....
கன்னி வன நாதா...!!!



தொடரும் ...

No comments:

Post a Comment