Tuesday, 9 June 2020

பட்டினத்தார் - முதல்வன் முறையீடு ( 9 )

பட்டினத்தார் பாடல்கள் 

முதல்வன் முறையீடு ( 9 )



பிறப்பைத் தவிர்த்தை இலை
பின்னாகக் கொண்டை .... இலை !
இறப்பைத் தவிர்தை ... இலை 
என்னென்று கேட்டை  ... இலை !!

பாசம் எரித்தை இலை ...
பரிதவிப்பைத் தீர்த்தை .. இலை !
பூசிய நீற்றைப் 
புனை என்று அளித்தை ...  இலை !!

அடிமை என்று சொன்னை இலை ..
அக்க மணி  தந்தை ....  இலை !
விடும் உலகம் போக்கி
உந்தன் வேடம் அளித்தை .... இலை !!

உன்னனில் அழைத்தை இலை..
ஒன்றாக்கிக் கொண்டை ... இலை !!
நின்னடியார் கூட்டத்தில்
நீ அழைத்து வைத்தை  .... இலை  !!

கண்ணி வன நாதா.....
கண்ணி வன நாதா  ............

இன்னும் வரும்..........



No comments:

Post a Comment