82.ஓம் சோரக்னாய நமஹ: -
பக்தர்களின் பிறப்பு இறப்பு என்ற நோயைத் தவிர்ப்பவர்.
83. ஓம் ரோக நாசனாய நமஹ: -
வலிப்பு, குஷ்டரோகம், க்ஷயரோகம் போன்ற மிகப் பெறிய வியாதிகளையும் நாசம் செய்து பக்தர்களுக்கு அருள் புரிபவர்.
84. ஓம் அன்ந்த மூர்த்தயே நமஹ: -
இடம் காலம் போன்ற எல்லைக் கடந்த ஸ்வரூபமானவர்.
85. ஓம் ஆனந்தாய நமஹ: -
ஆனந்தமே வடிவானவர்.
86. ஓம் சிகண்டினே நமஹ: -
சேவற்கொடி உடையவர்.
87. ஓம் டம்பாய நமஹ: -
{குழந்தைக் கடவுள் என்று சொல்லப்பட்டாலும்} பகைவர்களை பயமுறுத்தித் துன்புறுத்தும் சாமர்தியம் உள்ளவர்.
88. ஓம் பரம டம்பாய நமஹ: -
எதிரிகளிடம் போர் செய்வதில் நிகரற்ற சாமர்த்தியமும் வலிமையும் உள்ளவர்.
89. ஓம் மஹா டம்பாய நமஹ: -
மிகுந்த உறுதியும் ஆற்றலும் திறமையும் கொண்டு போர் செய்பவர்.
90. ஓம் விருஷாகபயே நமஹ: -
எல்லா உடல்களிலும் உயிராக இருந்து செயல் புரிபவர்.
ஹரி ஓம் !!!

No comments:
Post a Comment