பட்டினத்தார் பாடல்கள்
முதல்வன் முறையீடு ( 6 )
முதல்வன் முறையீடு ( 6 )
புல்லாகிப் பூடாய்
புலர்ந்த நாள்.... போதாதோ ?
கல்லாய் மரமாய்க்
கழிந்த நாள் ... போதாதோ ?
கீரியாய்க் கீடமாய்
கெட்ட நாள் ... போதாதோ ?
நீரியாய் ஊர்வனவாய்
நின்ற நாள்...... போதாதோ.. ??
பூதமொடுத் தேவருமாய்ப்
போன நாள்.... போதாதோ ?
வேதனைசெய் தானவராய்
வீழ்ந்த நாள் ..... போதாதோ..??
அன்னை வயிற்றில்
அழிந்த நாள் ... போதாதோ ?
மன்னவனாய் வாழ்ந்து
மரித்த நாள்.... போதாதோ .. ??
கன்னி வன நாதா...
கன்னி வன நாதா...
இன்னும் வரும்...


No comments:
Post a Comment