91. ஓம் காரணோபாத்த தேஹாய நமஹ: -
மற்றவர்களால் வெல்ல முடியாத அசுரர்களை அழிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக உடல் எடுத்தவர்.
92. ஓம் காரணாதீத விக்ரஹாய நமஹ: -
காரணம் கடந்த பிரம்ம ஸ்வரூபமானவர்.
93. ஓம் அநீஸ்வராய நமஹ: -
தன்னை விட உயர்ந்தவர் எவரும் இல்லாதவர்.
94. ஓம் அம்ருதாய நமஹ: -
அழிவற்றவர்.
95. ஓம் ப்ராயணாய நமஹ: -
எல்லோரிடமும் உயிருக்கு உயிரானவர்.
96. ஓம் ப்ராணாயம பராயணாய நமஹ: -
ப்ராணாயாம்ம் போன்ற யோக சாதனைகளுக்குப் புகலிடமாக இருப்பவர்.
97. ஓம் விருத்த ஹந்த்ரே நமஹ: -
விரோதம் செய்பவர்களை அழிப்பவர்.
98. ஓம் வீரக்னாய நமஹ: -
சூர பத்மன்,தரகாசுரன் போன்ற அசுரர்களை கொன்றவர்.
99. ஓம் ரக்த ஸ்யாமகலாய நமஹ: -
கரும் சிவப்பான கழுத்தை உடையவர்.
ஹரி ஓம் !!!

No comments:
Post a Comment