Thursday, 25 June 2020

குரு காயத்ரி

குரு காயத்ரி

காயத்ரி மந்திரங்களை முடிந்தவரை தினம் 9 முறை மனதை ஒருநிலைப்படுத்தி சொல்லிவர தடைகள் பீடைகள் விலகி அந்தந்த தெய்வத்தின் அருள் கிடைக்கும்.


ஓம் வ்ருஷபத் வஜாய வித்மஹே
க்ருணி ஹஸ்தாய தீமஹி
தந்நோ குரு பிரசோதயாத்

இந்த மந்திரத்தை 
வியாழன் கிழமை தோறும் 
குரு ஓரையில் அதாவது 
காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை 
பிற்பகல் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை  
இந்த மந்திரத்தை 
9 முறை சொல்ல குருவின் அருள் கிடைககும்

ஹரி ஓம் ! 


Wednesday, 24 June 2020

புதன் காயத்ரி

புதன் காயத்ரி

காயத்ரி மந்திரங்களை முடிந்தவரை தினம் 9 முறை மனதை ஒருநிலைப்படுத்தி சொல்லிவர தடைகள் பீடைகள் விலகி அந்தந்த தெய்வத்தின் அருள் கிடைக்கும்.


ஓம் கஜத்வஜாய வித்மஹே
சுக ஹஸ்தாய தீமஹி
தந்நோ புத பிரசோதயாத்

இந்த காயத்ரி மந்திரத்தை 
புதன் கிழமை தோறும் 
புதன் ஓரையில் அதாவது 
காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை 
பிற்பகல் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை 
இம்மந்திரத்தை 9 முறை சொல்ல 
புதனின் அருள் கிடைக்கும்

ஹரி ஓம் !!


Tuesday, 23 June 2020

கேது காயத்ரி

கேது காயத்ரி

காயத்ரி மந்திரங்களை முடிந்தவரை தினம் 9 முறை மனதை ஒருநிலைப்படுத்தி சொல்லிவர தடைகள் பீடைகள் விலகி அந்தந்த தெய்வத்தின் அருள் கிடைக்கும்.





ஓம் அஸ்வத் வஜாய வித்மஹே
சூல ஹஸ்தாய தீமஹி
தந்நோ கேது பிரசோதயாத்

இந்த மந்திரத்தை 
செவ்வாய் கிழமை தோறும் 
செவ்வாய் ஒரையில் அதாவது 
காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை 
பிற்பகல் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை 
கேதுவின் கெடுபலன் குறையும்


ஹரி ஓம் !!

செவ்வாய் காயத்ரி

செவ்வாய் காயத்ரி

காயத்ரி மந்திரங்களை முடிந்தவரை தினம் 9 முறை மனதை ஒருநிலைப்படுத்தி சொல்லிவர தடைகள் பீடைகள் விலகி அந்தந்த தெய்வத்தின் அருள் கிடைக்கும்.


ஓம் வீரத்வஜாய வித்மஹே
விக்ன ஹஸ்தாய தீமஹி
தந்நோ அங்காரக பிரசோதயாத்


இந்த காயத்ரி மந்திரத்தை செவ்வாய் கிழமை தோறும் செவ்வாய் ஒரையில் அதாவது ( காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை பிற்பகல் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை ) 9 முறை சொல்ல செவ்வாயின் அருள் கிட்டும்

ஹரி ஓம் !!!

ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டோத்திரம். ( 12 )

ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டோத்திரம். 12
{தமிழ் விளக்கத்துடன்}



100. ஓம் சுப்ரமண்யாய நமஹ: -
சிறப்பான பிரம்ம ஸ்வரூபம் பெற்று உலகம் முழுவதற்கும் ஞான செல்வம் அருளும் ஸ்வாமி.
101. ஓம் குஹாய நமஹ: -
மாயையால் எல்லாவற்றையும் மறைப்பவர்.
102. ஓம் ப்ரீதாய நமஹ: -
பக்தகளிட்த்தில் மிகவும் அன்பாக இருப்பவர்
103. ஓம் ப்ரம்மண்யாய நமஹ: -
தவத்திற்கும் வேதத்திற்கும் சான்றோர்களுக்கும் அனுகூலமாக இருப்பவர்.
104. ஓம் ப்ராஹ்மண ப்ரியாய நமஹ: -
ப்ராம்னர்க்களுக்கு பிரியமுள்ளவர்.
105. ஓம் வம்ச விருத்தி கராய நமஹ: -
பக்தர்களின் வம்சத்தை விருத்தி செய்து அருள் புரிபவர்.
106. ஓம் வேத வேத்யாய நமஹ: -
எல்லா வேதங்களையும் நன்கு அறிந்தவர்.
107. ஓம் அக்ஷயபல ப்ரதாய நமஹ: -
பக்தர்களுக்குக் குறைவற்ற நலங்களை தருபவர்.
108. ஓம் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஓம் ஸ்ரீ சுப்ரமண்யாய நமஹ: -
வள்ளி தேவசேனையுடன் எழுந்தருளியிருக்கும் சுப்ரமண்ய ஸ்வாமிக்கு நமஸ்காரம்.

ரி ஓம் !!!

Monday, 22 June 2020

சந்திரன் காயத்ரி

சந்திரன் காயத்ரி

காயத்ரி மந்திரங்களை முடிந்தவரை தினம் 9 முறை மனதை ஒருநிலைப்படுத்தி சொல்லிவர தடைகள் பீடைகள் விலகி அந்தந்த தெய்வத்தின் அருள் கிடைக்கும்.


ஓம் பத்மத் வஜாய வித்மஹே
ஹேம ரூபாய தீமஹி
தந்நோ சந்திரா பிரசோதயாத்


இந்த காயத்ரி மந்திரத்தை தி்ங்கள் கிழமை தோறும் சந்திர ஓரையில் அதாவது ( காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை பிற்பகல் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை )  9 முறை இம்மந்திரத்தை சொல்லிவர சந்திரனின் அருள் கிடைக்கும்

ஹரி ஓம் !!

ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டோத்திரம். ( 11 )

ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டோத்திரம். 11
{தமிழ் விளக்கத்துடன்}


91. ஓம் காரணோபாத்த தேஹாய நமஹ: -
மற்றவர்களால் வெல்ல முடியாத அசுரர்களை அழிக்க வேண்டும் என்ற காரணத்திற்காக உடல் எடுத்தவர்.
92. ஓம் காரணாதீத விக்ரஹாய நமஹ: -
காரணம் கடந்த பிரம்ம ஸ்வரூபமானவர்.
93. ஓம் அநீஸ்வராய நமஹ: -
தன்னை விட உயர்ந்தவர் எவரும் இல்லாதவர்.
94. ஓம் அம்ருதாய நமஹ: -
அழிவற்றவர்.
95. ஓம் ப்ராயணாய நமஹ: -
எல்லோரிடமும் உயிருக்கு உயிரானவர்.
96. ஓம் ப்ராணாயம பராயணாய நமஹ: -
ப்ராணாயாம்ம் போன்ற யோக சாதனைகளுக்குப் புகலிடமாக இருப்பவர்.
97. ஓம் விருத்த ஹந்த்ரே நமஹ: -
விரோதம் செய்பவர்களை அழிப்பவர்.
98. ஓம் வீரக்னாய நமஹ: -
சூர பத்மன்,தரகாசுரன் போன்ற அசுரர்களை கொன்றவர்.
99. ஓம் ரக்த ஸ்யாமகலாய நமஹ: -
கரும் சிவப்பான கழுத்தை உடையவர்.

ரி ஓம் !!!


Sunday, 21 June 2020

சூரிய காயத்ரி

சூரிய  காயத்ரி

காயத்ரி மந்திரங்களை முடிந்தவரை தினம் 9 முறை மனதை ஒருநிலைப்படுத்தி சொல்லிவர தடைகள் பீடைகள் விலகி அந்தந்த தெய்வத்தின் அருள் கிடைக்கும்




ஓம் அஸ்வத் வஜாய வித்மஹே
பாச ஹஸ்த்தாய தீமஹி
தந்நோ சூா்யா பிரசோதயாத்

இந்த காயத்திரி மந்திரத்தை ஞாயிற்று கிழமையில் சூரிய ஓரையில்
( காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை
பிற்பகல்
ஒரு மணி முதல் இரண்டு மணி வரை) 9 முறை சொல்லிவர சூரியனின் அருள் கிடைக்கும்

ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டோத்திரம். ( 10 )

ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டோத்திரம்.
{தமிழ் விளக்கத்துடன்}



82.ஓம் சோரக்னாய நமஹ: -
பக்தர்களின் பிறப்பு இறப்பு என்ற நோயைத் தவிர்ப்பவர்.
83. ஓம் ரோக நாசனாய நமஹ: -
வலிப்பு, குஷ்டரோகம், க்ஷயரோகம் போன்ற மிகப் பெறிய வியாதிகளையும் நாசம் செய்து பக்தர்களுக்கு அருள் புரிபவர்.
84. ஓம் அன்ந்த மூர்த்தயே நமஹ: -
இடம் காலம் போன்ற எல்லைக் கடந்த ஸ்வரூபமானவர்.
85. ஓம் ஆனந்தாய நமஹ: -
ஆனந்தமே வடிவானவர்.
86. ஓம் சிகண்டினே நமஹ: -
சேவற்கொடி உடையவர்.
87. ஓம் டம்பாய நமஹ: -
{குழந்தைக் கடவுள் என்று சொல்லப்பட்டாலும்} பகைவர்களை பயமுறுத்தித் துன்புறுத்தும் சாமர்தியம் உள்ளவர்.
88. ஓம் பரம டம்பாய நமஹ: -
எதிரிகளிடம் போர் செய்வதில் நிகரற்ற சாமர்த்தியமும் வலிமையும் உள்ளவர்.
89. ஓம் மஹா டம்பாய நமஹ: -
மிகுந்த உறுதியும் ஆற்றலும் திறமையும் கொண்டு போர் செய்பவர்.
90. ஓம் விருஷாகபயே நமஹ: -
எல்லா உடல்களிலும் உயிராக இருந்து செயல் புரிபவர்.

ரி ஓம் !!!

Saturday, 20 June 2020

ராகு காயத்ரி

ராகு காயத்ரி


காயத்ரி மந்திரங்களை முடிந்தவரை தினம் 9 முறை மனதை ஒருநிலைப்படுத்தி சொல்லிவர தடைகள் பீடைகள் விலகி அந்தந்த தெய்வத்தின் அருள் கிடைக்கும்.


ஓம் நாகத் வஜாய வித்மஹே
பத்ம ஹஸ்த்தாய தீமஹி
தந்நோ ராகு

இந்த மந்திரத்தை 
சனிக் கிழமை தோறும் 
சனி ஓரையில் அதாவது 
காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை 
பிற்பகல் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை  
இந்த மந்திரத்தை 9 முறை சொல்வதினால் 
ராகு கெடுதல் குறையும்

ஹரி ஓம் !!

சாயாபுத்திரன் சனி காயத்ரி

சாயாபுத்திரன் சனி காயத்ரி



காயத்ரி மந்திரங்களை முடிந்தவரை தினம் 9 முறை மனதை ஒருநிலைப்படுத்தி சொல்லிவர தடைகள் பீடைகள் விலகி அந்தந்த தெய்வத்தின் அருள் கிடைக்கும்.


sani Singnapur

ஓம் காகத் வஜாய வித்மஹ
கட்க ஹஸ்தாய தீமஹி
தந்நோ மந்த் பிரசோதயாத்


இந்த மந்திரத்தை சனிக் கிழமை தோறும் சனி ஓரையில் அதாவது ( காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை பிற்பகல் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை ) இம்மந்திரத்தை 9 முறை  சொல்ல சனியின் அருள்பாா்வை கிட்டும்

ஹரி ஓம் !!



ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டோத்திரம். ( 9 )

ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டோத்திரம்.
{தமிழ் விளக்கத்துடன்}

73. ஓம் தேஜோ நிதயே நமஹ; -
ஒளியின் பொக்கிஷம் என்று சொல்லும் வகையில் ஒளி பொருந்தியவர்.
74. ஓம் அனாமயாய நமஹ: -
வினைப்பயனால் உள்ளும் புறமும் பீடிக்கும் நோய்களால் பீடிக்கப் படாதவர் பிறவிப்பிணி இல்லாதவர்.
75. ஓம் பரமேஷ்டினே நமஹ: -
தந்தைக்குப் பிரணவ உபதேசம் செய்த ஆச்சாரியனாக இருந்தவர்.
76. ஓம் பரப்ரஹ்மணே நமஹ: -
பரம்பொருளாக இருப்பவர்.
77. ஓம் வேத கர்ப்பாய நமஹ: -
வேதங்களின் தலைவர்.
78. ஓம் விராட்ஸுதாய நமஹ: -
விராட் சொரூபமான பரமேஸ்வரினனின் புதல்வன்.
79. ஓம் புலிந்த கன்யா பர்த்ரே நமஹ: -
வேடன் மகளான வள்ளி தேவியின் கணவர்.
80.ஓம் மஹா ஸாரஸ்வதாவ்ருதாய நமஹ: -
அழகாகவும்,இனிமையாகவும் பேசுவதயே விரதமாக இருப்பவர்.
81.ஓம் ஆஸ்ரிதாகிலதாத்தே நமஹ: -
தன்னைச் சரணைந்தடைவர்களுக்கு எல்லா நலங்களையும் வழங்குபவர்.

ரி ஓம் !!!

Friday, 19 June 2020

சுக்கிரன் காயத்ரி

சுக்கிரன் காயத்ரி

காயத்ரி மந்திரங்களை முடிந்தவரை தினம் 9 முறை மனதை ஒருநிலைப்படுத்தி சொல்லிவர தடைகள் பீடைகள் விலகி அந்தந்த தெய்வத்தின் அருள் கிடைக்கும்




ஓம் அஸ்வத் வஜாய வித்மஹே
தனூா் ஹஸ்த்தாய தீமஹி
தந்நோ சுக்ர பிரசோதயாத்


இந்த மந்திரத்தை வெள்ளிக்கிழமை தோறும் சுக்கிர ஓரையில் அதாவது ( காலை ஆறு மணி முதல் ஏழு மணி வரை பிற்பகல் ஒரு மணி முதல் இரண்டு மணி வரை ) இந்த மந்திர்த்தை 9 முறை சொல்லிவர சுக்கிரனின் அருள் கிட்டும்


ஹரி ஓம் !


ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டோத்திரம். ( 8 )

ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டோத்திரம். 8
{தமிழ் விளக்கத்துடன்}
64. ஓம் கஹானாய நமஹ: -
மற்றவர்களால் அறிய இயலாத ஸ்வரூபமும் சக்தியையும் செயல்களும் கொண்டவர்.
65. ஓம் சந்திர வர்ணாய நமஹ: -
பூரண சந்திரனைப் போன்ற நிறமுள்ளவர்.
66. ஓம் கலாதராய நமஹ: -
சந்திரனின் கலைகளைப் போல் குளிர்ந்த சுபாவமுள்ளவர்.
67. ஓம் மாயாதராய நமஹ: -
மாயையை அடக்கியாள்பவர்.
68. ஓம் மஹாமாயினே நமஹ: -
பக்தர்களுக்கு மாயையைக் கொடுப்பவரும் நீங்குபவருமான ஈஸ்வரன்.
69. ஓம் கைவல்யாய நமஹ: -
ஒன்றேயாகிய கைவல்யம் என்ற முக்தியை அளிப்பவர்.
70. ஓம் சங்கராத்மஜாய நமஹ: -
பரமேஸ்வரனிடம் ஜோதிமயமான ஆத்மாவாக பிறந்தவர்.
71. ஓம் விஸ்வ யோனயே நமஹ:
உலகம் அனைத்திற்கும் பிறப்பிடம்.
72. ஓம் அமேயாத்மனே நமஹ: -
அளவிட இயலாத மகிமையுள்ளவர்.

ரி ஓம் !!!

Thursday, 18 June 2020

ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டோத்திரம். ( 7 )

ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டோத்திரம்.
{தமிழ் விளக்கத்துடன்}


55. ஓம் சமீ கர்ப்பாய நமஹ: -
எரியும் கட்டையிலிருந்து நெருப்புப் பொறிகள் கிளம்புவது போல் சிவனின் கண்களி லிருந்து கிளம்பிய பொறிகளிலிருந்து தோன்றியவர்.
56. ஓம் விஸ்வ ரேதஸே நமஹ: -
உலகத்திற்கு வித்தாகிய பரம்பொருள்.
57. ஓம் ஸுராரிக்னே நமஹ: -
தேவர்களின் பகைவர்களை அழிப்பவர்.
58. ஓம் ஹரித்வர்ணாய நமஹ: -
மஞ்சள் நிறமாகவும் பொன்னிறமாகவும் காணப்படுபவர்.
59. ஓம் சுபகராய நமஹ: -
பக்தர்களுக்கு நன்மையே செய்பவர்.
60. ஓம் வடவே நமஹ: -
பிரம்மசாரி விரதம் பூண்டு ஆண்டியானவர்.
61. ஓம் படுவேஷப்ருதே நமஹ: -
எதிரிகளிடம் மிகவும் கொடுமையானவர் போல் நடிப்பவர்.
62. ஓம் பூஷ்ணே நமஹ: -
எல்லோரையும் பாதுகாப்பவர்.
63. ஓம் கபஸ்தயே நமஹ: -
ஒளி வீசும் சூரியன் போல் பிரகாசிப்பவர்.


ரி ஓம் !!!


பட்டினத்தார் - முதல்வன் முறையீடு ( 18 )

பட்டினத்தார் பாடல்கள் 

முதல்வன் முறையீடு ( 18 )


அன்ன விசாரம் அது
அற்ற இடம் கிட்டாதோ.....
சொன்ன விசாரம்
தொலைந்த இடம் கிட்டாதோ  .... ?

உலக ..   விசாரம்
ஒழிந்த இடம் கிட்டாதோ.... 
மலக்குழுவின் மின்னார் 
வசியாதும் கிட்டாதோ ........... ??

ஒப்புவமைப் பற்றோடு
ஒழிந்த இடம் கிட்டாதோ ......
செப்புதற்கு எட்டாத்
தெளிந்த இடம் கிட்டாதோ .... ??

வாக்கு மனாதீத 
அகோசரத்தில் செல்ல எனை
தாக்கும் அருட்குரு 
நிந்தாள் இணைக்கு யான் ... போற்றி !!!

முறையீடு ...  முற்றிற்று !!!

Wednesday, 17 June 2020

ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டோத்திரம் ( 6 )

ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டோத்திரம்.
{தமிழ் விளக்கத்துடன்}


46. ஓம் ஏக வர்ணாய நமஹ: -
ஒரே தத்துவமாகிய பரம்பொருள்.
47. ஓம் த்விவர்ணாய நமஹ: -
சிருஷ்டிக்குக் காரணமான பிரகிருதியாகவும்,புருஷனாகவும் திகழ்பவர்.
48. ஓம் த்ரிவர்ணாய நமஹ: -
சத்வம்,ரஜஸ்,தமஸ் என்ற மூன்று குணங்களுக்கும் அதிபதியாக விளங்குபவர்.
49. ஓம் ஸுமனோஹராய நமஹ: -
அளவு கடந்த ஆனந்த வடிவமாக மனதை கவர்பவர்.
50. ஓம் சதுர் வர்ணாய நமஹ: -
மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் என்ற நாங்கு உருவங்களாக இருப்பவர்.
51. ஓம் பஞ்ச வர்ணாய நமஹ: -
பஞ்ச பூதங்களின் வடிவமானவர்.
52. ஓம் ப்ரஜாபதயே நமஹ: -
உயிர்த் தொகுதிகளுக்குத் தலைவர்.அல்லது உலக ஸ்ருஷ்டிக்குக் காரணமாக இருப்பவர்.
53. ஓம் அஹஸ்பதயே நமஹ: -
பகலை உண்டாக்கும் சூரியனைப்போல் மிகுந்த ஒளியுடன் விளங்குபவர்.
54. ஓம் அக்னிகர்ப்பாய நமஹ: -
அக்னியில் பிறந்தவர்.


பட்டினத்தார் - முதல்வன் முறையீடு ( 17 )

பட்டினத்தார் பாடல்கள் 

முதல்வன் முறையீடு ( 17 )



வாக்கிறந்து நின்ற 
மவுனமது கிட்டாதோ....
தாக்கிறந்து நிற்கும் அந்த
தற் சுத்தி கிட்டாதோ   .......  ??

வெந்துயரைத் தீர்க்கும் அந்த
வெட்டவெளி கிட்டாதோ .....
சிந்தை ஐயம் தீர்க்கும் அந்த
தேறல் அது கிட்டாதோ ... ??

ஆன அடியார்க்கு
அடிமைகொளக் கிட்டாதோ ....
ஊனமற என்னை
உணர்த்துவித்தல் கிட்டாதோ ... ??

என்னென்று சொல்லுவண்டா...
என் குருவே ..  கேளேடா... 
பிள்ளை...
எனக்கு நீ அல்லால் பிறிதிலையே .... !!

கன்னி வன நாதா ..........
கன்னி வன நாதா .........

முறையீடு   தொடரும் ....






Tuesday, 16 June 2020

பட்டினத்தார் - முதல்வன் முறையீடு ( 16 )

பட்டினத்தார் பாடல்கள் 

முதல்வன் முறையீடு ( 16 )



அரி பிரமர் போற்ற
அமரர் சய சயென
பெரியம்மை பாகம் வளர்
பேரழகைப் பாரேனோ   .... ??

சுந்தர நீ...ற்றின்
சொகுசுதனைப் பாரேனோ ...
சந்திர சேகரனாய்த் 
தயவு செய்தல் பாரேனோ......... ??

கெட்டநாள் கெட்டாலும்
கிருபை இனிப் பாரேடா ......
பட்டநாள் பட்டாலும்
பதம் எனக்குக் கிட்டாதோ....... ??

நற்பருவம் ஆக்கும் அந்த
நாள் எனக்குக் கிட்டாதோ....
எப்பருவகும் கழன்ற 
ஏகாந்தம் கிட்டாதோ .........??

கன்னி வன நாதா .....
கன்னி வன நாதா.......

இன்னும் வரும் ....

Monday, 15 June 2020

பட்டினத்தார் - முதல்வன் முறையீடு ( 15 )

பட்டினத்தார் பாடல்கள் 

முதல்வன் முறையீடு ( 15 )


சரக்கொன்றைப் பூத்த 
சடைக் காட்டைப் பாரேனோ....
எருக்கு அறுகு ஊமத்தை அணி
ஏகாந்தம் பாரேனோ.....??

கொக்கிறகு கூடி நின்ற 
கொண்டாட்டம் பாரேனோ....
அக்கினியை ஏந்தி நிற்கும் 
ஆனந்தம் பாரேனோ..... ??

தூக்கிய காலும்
துடி இடையும் பாரேணோ........
தாக்கு முயலகன் மேல் 
தாண்டவத்தைப் பாரேனோ ...??

வீசு கரமும் 
விகசிதமும் பாரேனோ.....
ஆசை அழிக்கும்
அபய கரம் பாரேனோ ... ??

கன்னி வன நாதா....
கன்னி வன நாதா ........

இன்னும் வரும்.....