Saturday, 25 October 2014

திருமூலர் - சராசரமும் ஆடுதையா !

சராசரமும்  ஆடுதையா !!





தத்துவம்  ஆடச்
சதாசிவம்  தானாடச்

சித்தமும்  ஆடச்
சிவசக்தி தானாட

வைத்த  சராசரம்  ஆட
மறையாட

அத்தனும்  ஆடினான் ,
ஆனந்தக்  கூத்தே  !


---  திரு மூலர்

திருநாவுக்கரசர் - எல்லாம் கடவுள் செயல்




எல்லாம் கடவுள் செயலே என்பதை ஒரு 
திருத்தாண்டகப் பாட்டில் 
மிக அழகாகப் 
பாடியுள்ளார் திருநாவுக்கரசர். 
 
ஆட்டுவித்தால் ஆர்ஒருவர் ஆடா தாரே 
அடக்குவித்தால் ஆர்ஒருவர் அடங்கா தாரே 
ஓட்டுவித்தால் ஆர்ஒருவர் ஓடா தாரே 
உருகுவித்தால் ஆர்ஒருவர் உருகா தாரே 
பாட்டுவித்தால் ஆர்ஒருவர் பாடா தாரே 
பணிவித்தால் ஆர்ஒருவர் பணியா தாரே 
காட்டுவித்தால் ஆர்ஒருவர் காணா தாரே 
காண்பார்ஆர் கண்ணுதலாய் காட்டாக் காலே. 


( தனித்திருத்தாண்டகம், 7175)


Tuesday, 13 May 2014

பாம்பாட்டி சித்தர் - சாதிப் பிரிவு

சாதிப்  பிரிவு 



சாதிப் பிரிவு  பற்றிய  பாம்பாட்டி  சித்தரின்  பாடல் .


சாதிப் பிரிவினிலே  தீயை  மூட்டுவோம் !
          சந்தை வெளியினிலே  கோலை  நாட்டுவோம் !
வீதிப் பிரிவினிலே  விளையாடிடுவோம் !
          வேண்டாத  மனையினில்  உறவு  செய்வோம் !
சோதித்து  உலாவியே  தூங்கி விடுவோம் !
           சுகமான  பெண்ணையே  சுகித்திருப்போம் !
ஆதிப்  பிரமர்கள்  ஐந்து பேரும் 
           அறியார்களிதை  என்று ஆடாய்  பாம்பே ! 


பெரிய  ஞானக்கோவை   என்ற  நூலில் இருந்து. 




பட்டினத்தார் - பூரண மாலை ( 4 )

பட்டினத்தார்  பாடல்கள்  

பூரண  மாலை 




வாசிதனைப்  பார்த்து  மகிழ்ந்து 
           உனைத்தான்  போற்றாமல் 
காசிவரை  போய்  திரிந்து 
           கால்  அலுத்தேன் ......                 பூரணமே   !           21

கருவிகள்  தொன்னூற்றாறில் 
           கலந்து   விளையாடினதை 
இருவிழியால்   பாராமல் 
            ஈடழிந்தேன்    ................              பூரணமே   !           22 

உடலுக்குள்  நீதி  
             நின்று  உலாவிதனைக் காணாமல் 
கடல் மலை  தோறும் திரிந்து 
             கால்  அலுத்தேன்    ........          பூரணமே   !           23

எத்தேச  காலமும்  
              நாம்  இறவாது  இருப்போம் என்று 
உற்று  உனைத்தான்  பாராமல் 
               உருவழிந்தேன் ........                பூரணமே   !           24

எத்தனை  தாய் தந்தை 
                இவர்களிடத்தே இருந்து 
பித்தனாய்  யானும் 
                பிறந்து  இறந்தேன் .......         பூரணமே   !           25


பெற்று அலுத்தார்   தாயார் 
               பிறந்தலுத்தேன்  நானும், உந்தன் 
பொற்றுணைத்தாள்  தந்து 
               புகழ் அருள்வாய்  .......               பூரணமே   !            26

உற்றார்  அழுது  அலுத்தார் 
               உறன்முறையார்  சுட்டு  அலுத்தார் 
பெற்று  அலுத்தார்  தாயார் 
               பிறந்து  அலுத்தேன் ..........       பூரணமே   !            27

பிரமன்  படைத்து அலுத்தான் 
               பிறந்து இறந்து நான் அலுத்தேன் 
உரமுடைய  அக்கினிதான் 
               உண்டு  அலுத்தான்  ............    பூரணமே   !            28

எண்பத்து  நானூறு ஆயிரம் 
              செனனமும்  செனித்து 
புண்பட்டு  நானும் 
               புலம்பினேன் ..............                 பூரணமே   !           29

என்னை  அறியாமல்  
                எனக்குள்ளே  நீ இருக்க 
உன்னை  அறியாமல்  
                 உடல்  அழிந்தேன்  ..........       பூரணமே   !          30



தொடரும் ........



Wednesday, 7 May 2014

பட்டினத்தார் - பூரண மாலை ( 3 )

பட்டினத்தார்  பாடல்கள் 

பூரண  மாலை 







ஊனுக்குள்  நீ 
          நின்று உலாவினதைக்  காணாமல் 
நானென்று  இருந்து 
          நலம் இழந்தேன்    பூரணமே  !               11

மெய்வாழ்வை  நம்பி 
         விரும்பி மிக  வாழாமல் ,
பொய் வாழ்வை  நம்பிப் 
         புலம்பினேன்     பூரணமே  !                     12

பெண்டுபிள்ளை  தந்தைதாய் 
         பிறவியுடன்  சுற்றம்  இவை 
உண்டென்று  நம்பி  
          உடலழிந்தேன்    பூரணமே  !                  13

இந்த உடல்   உயிரை 
          எப்போதும்தான்  சதமாய் 
பந்தமுற்று  நானும் 
         பதமிழ்ந்தேன்    பூரணமே   !                     14

தண்டிகை  பல்லக்குடனே 
         சகலமும் பந்துக்களும் 
உண்டென்று  நம்பி  
          உணர்விழந்தேன்  பூரணமே  !                15

மாதர்  பிரபஞ்ச 
          மயக்கத்திலே  விழுந்து 
போத  மயங்கி 
          பொறியழிந்தேன்  பூரணமே  !                16     

சரியை கிரியா யோகந்தான் 
         ஞானம்  பாராமல் 
பரிதி கண்ட மதியதுபோல் 
         பயனழிந்தேன்  பூரணமே  !                       17

மண் பெண்  பொன்னாசை 
         மயக்கத்திலே  விழுந்து 
கண்கெட்ட  மாடாது போல் 
         கலங்கினேன்   பூரணமே  !                        18

தனிமுதலைப்  பார்த்து 
          தனித்திருந்து  வாழாமல் 
அனியாயமாய்  பிறந்திங்கு 
         அலைந்துநின்றேன்  பூரணமே  !            19

ஈராறு  தன் கலைக்குள் 
         இருந்து  கூத்தாடினதை 
ஆராய்ந்து  பாராமல்  
          அறிவிழந்தேன்  பூரணமே  !                    20


தொடரும் .....





Wednesday, 16 April 2014

பட்டினத்தார் - பூரண மாலை ( 2 )

பட்டினத்தார்  பாடல்கள்  

பூரண  மாலை 


நெற்றிவிழி   உடைய  
                நிர்மல  சதாசிவத்தைப் 
புத்தியுடன்  பாராமல் 
                பொறி அழிந்தேன்  பூரணமே !                  6


 நாத   விந்துதனை 
                நயமுடனே  பாராமல் 
போத  மயங்கி 
                 பொறி  அழிந்தேன்  பூரணமே !                7

உச்சி  வெளியை  
                உறுதியுடன்  பாராமல்  
அச்சமுடன்  நானும் 
                அறிவழிந்தேன்      பூரணமே !                  8


மூக்கு முனையை 
               முழித்திருந்து   பாராமல்  
ஆக்கைகேட்டு  நானும்  
                 அறிவழிந்தேன்  பூரணமே  !                   9

இடை  பிங்கலையின் 
               இயல்பறிய  மாட்டாமல்  
தடையுடனே  யானும் 
                தயங்கினேன்   பூரணமே !                     10



தொடரும் ....


Wednesday, 9 April 2014

பட்டினத்தார் - பூரண மாலை ( 1 )

பட்டினத்தார்  பாடல்கள் 

பூரண  மாலை.



மூலத்   துதித்தெழுந்த  
                 முக்கோனச்  சக்கரத்துள்  
வாலைதனைப் போற்றாமல்  
                 மதி  மறந்தேன்  பூரணமே !!                        1


உந்திக்   கமலத்துதித்து 
                  நின்ற  பிரமாவைச் 
சந்தித்து  காணாமல்  
                  தட்டழிந்தேன்    பூரணமே                           2


நாவிக்  கமல  
                 நடு நெடுமால்  காணாமல் 
ஆவி கெட்டு  யானும்  
                அறிவிழந்தேன்  பூரணமே                            3


உருத்திரனை  இருதயத்தில் 
                உண்மையுடன்  பாராமல்  
கருத்தழிந்து  நானும் 
                கலங்கினேன்  பூரணமே                               4


விசுத்தி  மகேசுரனை  
                விழிதிறந்து  பாராமல் 
பசித்துருகி  நெஞ்சம்  
                பதறினேன்  பூரணமே                                     5


தொடரும் ....


Friday, 28 March 2014

கான்கிரீட் காடுகள்

பள்ளிப் பருவத்தில்  ( 1968  - 1970 ) ,  வாரப் பத்திரிகை ஒன்றில்  "  எங்கு  பார்த்தாலும்  கான்கிரீட்  காடுகள் " என்ற சுஜாதாவின்  வரிகளைப்  படித்து  ரசித்ததுண்டு. " என்ன ஒரு  அதிதமான  கற்பனை "   என்று  வியந்ததும்  உண்டு.  பின்னர்  பல  எழுத்தாளர்களின்  கற்பனையில்  ' பளபளவென்ற  தார் ரோடு, மழ  மழவென்ற  சிமெண்ட் சாலைகளை"  சந்தித்ததுண்டு.

பாரதியின்  ' காணி நிலம்  வேண்டும், வீடு  வேண்டும்,  வீட்டைச் சுற்றி  தோட்டம்  வேண்டும் "  என்ற  கனவில்  பாதி  நினைவானது. பின் வந்த எழுத்தாளர்களின் கற்பனையில் வந்த  கான்கிரீட்  காடுகளும்  பளபளவென்ற  சிமெண்ட்  சாலைகளும்  நினைவானது.  வீடும்,  வீட்டைச் சுற்றிய  கான்கிரீட்  காடுகளும், சிமெண்ட் தளங்களும்தான்   இன்றைய நிஜம்.

நகரங்கள்  மட்டுமல்ல, சிறு கிராமங்களும்  சிமெண்ட்  தரையில்  பளபளவென
மின்னுகின்றன.

ஏரிகள், குளங்கள் இருந்தாலும், அதற்கு நீர் கொணர்ந்த  பாதைகளும், கால்வாய்களும்  காணாமல் போய்விட்டன.

கான்கிரீட்  போர்வையால் , வான் தரும்  மழை நீரை உறிஞ்சமுடியாமல்  இந்த  மண் தவிக்கும் தவிப்பு  மனிதனுக்கு  புரியவில்லை.

சிறு வயதில், திருவானைக்காவல்  ஜம்புகேச்வரரையும், அவரைச் சுற்றி   நீர்   ஊற்றெடுத்துப்  பெருகுவதையும்   கண்கள் விரிய  பார்த்திருக்கிறேன்.  ஆனால்  இன்று,  ஊற்றுக் கண்கள்  அடைபட்டுப் போனதால்,  சிவ லிங்கத்தை சுற்றி நீர்  ஊற்றெடுப்பதில்லை  என்று  எங்கோ  படித்து  கண்  கலங்கியிருக்கிறேன். கோவிலைச்  சுற்றி  கான்கிரீட்  காடுகள்  முளைத்ததின்  விளைவோ  இது ?

இறைவா !!   வானவர்களுக்கு  அமுதம் தந்த  நீ , இந்த வெறும்  நரர்களுக்கு    நீரைத்தரமாட்டாயா?


















பாம்பாட்டி  சித்தர்

குற்றமற்ற  சிவனுக்கு  குண்டலம்  ஆனாய்
கூறும்  திருமாலுக்கு குடையானாய்
கற்றைக் குழல்  பார்வதிக்கு  கங்கணமானாய்
கரவாமல்  உளம் களிந்தாடு  பாம்பே !

மண்டலத்தைத்  தாங்கும் மிக வல்லமை  கொண்டாய்
மாயனுக்கு  படுக்கைக்கு  வண்ணப்  பாயானாய்
கண்ட  படை  நடுங்கிட  காட்சியும்  பெற்றாய்
கண்ணே  செவியாகக் கொண்டாய்  ஆடு  பாம்பே  !

இருவர்  மண்  சேர்த்திட  ஒருவர்  பண்ண
ஈரைந்து  மாதமாய்  வைத்த சூளை
அருமையாய் இருப்பினும்  அந்த  சூளை
அரைக்காசுக்கு  ஆகாது என்று  ஆடாய்  பாம்பே !

ஆசையென்னும்  செருப்பின்மேல்  அடியை வைத்தே
ஆங்கார  முட்காட்டை  அறவே  மிதித்தே
காசை எனும்  துர்க்குணத்தில்  கனலைக்  கொளுத்தி
காலாகாலம்  கடந்தோம்  என்று  ஆடாய்  பாம்பே  !


இடைக்காட்டுச்  சித்தர்  பாடல்
நாராயணக்  கோனார்  கூற்று

கண்ணுள்  கருமணியை,
கற்பகத்தை,
காஞ்சனத்தை ,
பெண்ணுருவப்  பாதியனை,
பேரின்பப்   முப்பொருளை,
விண்ணின்  அமுதை,
விளக்கொளியை,
வெங்கதிரை,
தண்ணளியை.
உள்ளில்  வைத்து
சாரூபம்  சாருவனே  !


Friday, 21 March 2014

பட்டினத்தார்  பாடல்கள்


பிறக்கும் பொழுது  கொண்டுவந்ததில்லை
பிறந்து  மண் மேல்
இறக்கும் பொழுது  கொண்டுபோவதில்லை
இடை நடுவில்  குறிக்கும் இச்செல்வம்
சிவன் தந்ததென்று  கொடுக்க அறியாது
இறக்கும்  குலாமருக்கு  என் சொல்லுவேன்
கச்சி  ஏகம்பனே !


ஊரும்  சதமல்ல
உற்றார்  சதமல்ல
உற்றுப் பெற்ற பேரும்  சதமல்ல
பெண்டிர்  சதமல்ல
பிள்ளைகளும்  சதமல்ல

சீரும்  சதமல்ல
செல்வம்  சதமல்ல
தேசத்திலே  யாரும்  சதமல்ல
நின் தாள்  சதம்
கச்சி  ஏகம்பனே !!

அன்னை  எத்தனை  எத்தனை  அன்னையோ
அப்பன் எத்தனை  எத்தனை அப்பனோ
பின்னை  எத்தனை தெத்தனை  பெண்டிரோ
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னை  எத்தனை எத்தனை  சன்மமோ
மூடனாய்  அடியேனும்  அறிந்திலேன்
இன்னும்  எத்தனை  எத்தனை   சன்மமோ
என்செய்வேன்  கச்சி  ஏகம்பனே !!

பிறவாததிருக்க  வரம் பெறல்  வேணடும்
பிறந்துவிட்டால்
இறவாதிருக்க  மருந்துண்டு  காண்
 இது எப்படியோ
அறமார் புகழ்த் தில்லை
அம்பலவாணர் அடிக்கமலம்
மறவாதிரு  மனமே!
அது காண்  மருந்துனக்கே !!

விட்டுவிடப் போகுது  உயிர்
விட்ட உடனே  உடலை
சுட்டுவிட போகின்றார்  சுற்றத்தார்
பட்டது பட்டு  எந்நேரமும்
சிவனை  ஏத்துங்கள் ,  போற்றுங்கள்
சொன்னேன்,  அதுவே  சுகம்.

காலன்  வரம் முன்னே
கண் பஞ்சடை முன்னே
பாலுன்  கடைவாய்  படுமுன்னே
மேல் விழுந்தே உற்றார்  அழுமுன்னே
ஊரார் சுடுமுன்னே
குற்றாலத்தானையே  கூறு .

இருப்பது பொய்
போவது  மெய்  என்றெண்ணி
நெஞ்சே
ஒருத்தருக்கு
தீங்கினை உன்னாதே
பருத்த  தொந்தி  நம்மதென்று  நாமிருக்க
நாய்  நரிகள்  பேய்  கழுகு
தம்மதென்று   தாமிருக்கும்  தான்.

உன்னைத்  துதியேனோ
ஊர் நாடி  வாரேனோ
பொன்னடியைப்  பாரேனோ
பூரித்து  நில்லேனோ
ஓங்காரப் பொற்சிலம்பின்  உல்லாசம்  பாரேனோ
பாங்கான  தண்டை  பல  அணியும்  பாரேனோ
வீர  கண்டாமணியின்  வெற்றிதனைப்  பாரேனோ
சூரர் கண்டு போற்றும்  அந்தச் சுந்தரத்தைப் பாரேனோ
இடையில்  புலித்தோல்  இருந்த நலம்  பாரேனோ
விடையில்  எழுந்தருளும்  வெற்றியினைப் பாரேனோ









Tuesday, 18 March 2014

பட்டினத்தார்  பாடல்கள் 

கல்லாப்  பிழையும் ,
கருதாப் பிழையும் ,

கசிந்துருகி 
நில்லாப் பிழையும் ,

நின்  அஞ்செழுத்தைச்
சொல்லாப் பிழையும் ,
துதியாப்  பிழையும்,
தொழாப்  பிழையும் ,

எல்லாப்  பிழையும் ,
பொறுத்தருள்வாய் 
கச்சி  ஏகம்பனே !!