பாம்பாட்டி சித்தர்
குற்றமற்ற சிவனுக்கு குண்டலம் ஆனாய்
கூறும் திருமாலுக்கு குடையானாய்
கற்றைக் குழல் பார்வதிக்கு கங்கணமானாய்
கரவாமல் உளம் களிந்தாடு பாம்பே !
மண்டலத்தைத் தாங்கும் மிக வல்லமை கொண்டாய்
மாயனுக்கு படுக்கைக்கு வண்ணப் பாயானாய்
கண்ட படை நடுங்கிட காட்சியும் பெற்றாய்
கண்ணே செவியாகக் கொண்டாய் ஆடு பாம்பே !
இருவர் மண் சேர்த்திட ஒருவர் பண்ண
ஈரைந்து மாதமாய் வைத்த சூளை
அருமையாய் இருப்பினும் அந்த சூளை
அரைக்காசுக்கு ஆகாது என்று ஆடாய் பாம்பே !
ஆசையென்னும் செருப்பின்மேல் அடியை வைத்தே
ஆங்கார முட்காட்டை அறவே மிதித்தே
காசை எனும் துர்க்குணத்தில் கனலைக் கொளுத்தி
காலாகாலம் கடந்தோம் என்று ஆடாய் பாம்பே !
இடைக்காட்டுச் சித்தர் பாடல்
நாராயணக் கோனார் கூற்று
கண்ணுள் கருமணியை,
கற்பகத்தை,
காஞ்சனத்தை ,
பெண்ணுருவப் பாதியனை,
பேரின்பப் முப்பொருளை,
விண்ணின் அமுதை,
விளக்கொளியை,
வெங்கதிரை,
தண்ணளியை.
உள்ளில் வைத்து
சாரூபம் சாருவனே !
குற்றமற்ற சிவனுக்கு குண்டலம் ஆனாய்
கூறும் திருமாலுக்கு குடையானாய்
கற்றைக் குழல் பார்வதிக்கு கங்கணமானாய்
கரவாமல் உளம் களிந்தாடு பாம்பே !
மண்டலத்தைத் தாங்கும் மிக வல்லமை கொண்டாய்
மாயனுக்கு படுக்கைக்கு வண்ணப் பாயானாய்
கண்ட படை நடுங்கிட காட்சியும் பெற்றாய்
கண்ணே செவியாகக் கொண்டாய் ஆடு பாம்பே !
இருவர் மண் சேர்த்திட ஒருவர் பண்ண
ஈரைந்து மாதமாய் வைத்த சூளை
அருமையாய் இருப்பினும் அந்த சூளை
அரைக்காசுக்கு ஆகாது என்று ஆடாய் பாம்பே !
ஆசையென்னும் செருப்பின்மேல் அடியை வைத்தே
ஆங்கார முட்காட்டை அறவே மிதித்தே
காசை எனும் துர்க்குணத்தில் கனலைக் கொளுத்தி
காலாகாலம் கடந்தோம் என்று ஆடாய் பாம்பே !
இடைக்காட்டுச் சித்தர் பாடல்
நாராயணக் கோனார் கூற்று
கண்ணுள் கருமணியை,
கற்பகத்தை,
காஞ்சனத்தை ,
பெண்ணுருவப் பாதியனை,
பேரின்பப் முப்பொருளை,
விண்ணின் அமுதை,
விளக்கொளியை,
வெங்கதிரை,
தண்ணளியை.
உள்ளில் வைத்து
சாரூபம் சாருவனே !
No comments:
Post a Comment