பட்டினத்தார் பாடல்கள்
பிறக்கும் பொழுது கொண்டுவந்ததில்லை
பிறந்து மண் மேல்
இறக்கும் பொழுது கொண்டுபோவதில்லை
இடை நடுவில் குறிக்கும் இச்செல்வம்
சிவன் தந்ததென்று கொடுக்க அறியாது
இறக்கும் குலாமருக்கு என் சொல்லுவேன்
கச்சி ஏகம்பனே !
ஊரும் சதமல்ல
உற்றார் சதமல்ல
உற்றுப் பெற்ற பேரும் சதமல்ல
பெண்டிர் சதமல்ல
பிள்ளைகளும் சதமல்ல
சீரும் சதமல்ல
செல்வம் சதமல்ல
தேசத்திலே யாரும் சதமல்ல
நின் தாள் சதம்
கச்சி ஏகம்பனே !!
அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
பின்னை எத்தனை தெத்தனை பெண்டிரோ
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ
மூடனாய் அடியேனும் அறிந்திலேன்
இன்னும் எத்தனை எத்தனை சன்மமோ
என்செய்வேன் கச்சி ஏகம்பனே !!
பிறவாததிருக்க வரம் பெறல் வேணடும்
பிறந்துவிட்டால்
இறவாதிருக்க மருந்துண்டு காண்
இது எப்படியோ
அறமார் புகழ்த் தில்லை
அம்பலவாணர் அடிக்கமலம்
மறவாதிரு மனமே!
அது காண் மருந்துனக்கே !!
விட்டுவிடப் போகுது உயிர்
விட்ட உடனே உடலை
சுட்டுவிட போகின்றார் சுற்றத்தார்
பட்டது பட்டு எந்நேரமும்
சிவனை ஏத்துங்கள் , போற்றுங்கள்
சொன்னேன், அதுவே சுகம்.
காலன் வரம் முன்னே
கண் பஞ்சடை முன்னே
பாலுன் கடைவாய் படுமுன்னே
மேல் விழுந்தே உற்றார் அழுமுன்னே
ஊரார் சுடுமுன்னே
குற்றாலத்தானையே கூறு .
இருப்பது பொய்
போவது மெய் என்றெண்ணி
நெஞ்சே
ஒருத்தருக்கு
தீங்கினை உன்னாதே
பருத்த தொந்தி நம்மதென்று நாமிருக்க
நாய் நரிகள் பேய் கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தான்.
உன்னைத் துதியேனோ
ஊர் நாடி வாரேனோ
பொன்னடியைப் பாரேனோ
பூரித்து நில்லேனோ
ஓங்காரப் பொற்சிலம்பின் உல்லாசம் பாரேனோ
பாங்கான தண்டை பல அணியும் பாரேனோ
வீர கண்டாமணியின் வெற்றிதனைப் பாரேனோ
சூரர் கண்டு போற்றும் அந்தச் சுந்தரத்தைப் பாரேனோ
இடையில் புலித்தோல் இருந்த நலம் பாரேனோ
விடையில் எழுந்தருளும் வெற்றியினைப் பாரேனோ
பிறக்கும் பொழுது கொண்டுவந்ததில்லை
பிறந்து மண் மேல்
இறக்கும் பொழுது கொண்டுபோவதில்லை
இடை நடுவில் குறிக்கும் இச்செல்வம்
சிவன் தந்ததென்று கொடுக்க அறியாது
இறக்கும் குலாமருக்கு என் சொல்லுவேன்
கச்சி ஏகம்பனே !
ஊரும் சதமல்ல
உற்றார் சதமல்ல
உற்றுப் பெற்ற பேரும் சதமல்ல
பெண்டிர் சதமல்ல
பிள்ளைகளும் சதமல்ல
சீரும் சதமல்ல
செல்வம் சதமல்ல
தேசத்திலே யாரும் சதமல்ல
நின் தாள் சதம்
கச்சி ஏகம்பனே !!
அன்னை எத்தனை எத்தனை அன்னையோ
அப்பன் எத்தனை எத்தனை அப்பனோ
பின்னை எத்தனை தெத்தனை பெண்டிரோ
பிள்ளை எத்தனை எத்தனை பிள்ளையோ
முன்னை எத்தனை எத்தனை சன்மமோ
மூடனாய் அடியேனும் அறிந்திலேன்
இன்னும் எத்தனை எத்தனை சன்மமோ
என்செய்வேன் கச்சி ஏகம்பனே !!
பிறவாததிருக்க வரம் பெறல் வேணடும்
பிறந்துவிட்டால்
இறவாதிருக்க மருந்துண்டு காண்
இது எப்படியோ
அறமார் புகழ்த் தில்லை
அம்பலவாணர் அடிக்கமலம்
மறவாதிரு மனமே!
அது காண் மருந்துனக்கே !!
விட்டுவிடப் போகுது உயிர்
விட்ட உடனே உடலை
சுட்டுவிட போகின்றார் சுற்றத்தார்
பட்டது பட்டு எந்நேரமும்
சிவனை ஏத்துங்கள் , போற்றுங்கள்
சொன்னேன், அதுவே சுகம்.
காலன் வரம் முன்னே
கண் பஞ்சடை முன்னே
பாலுன் கடைவாய் படுமுன்னே
மேல் விழுந்தே உற்றார் அழுமுன்னே
ஊரார் சுடுமுன்னே
குற்றாலத்தானையே கூறு .
இருப்பது பொய்
போவது மெய் என்றெண்ணி
நெஞ்சே
ஒருத்தருக்கு
தீங்கினை உன்னாதே
பருத்த தொந்தி நம்மதென்று நாமிருக்க
நாய் நரிகள் பேய் கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தான்.
உன்னைத் துதியேனோ
ஊர் நாடி வாரேனோ
பொன்னடியைப் பாரேனோ
பூரித்து நில்லேனோ
ஓங்காரப் பொற்சிலம்பின் உல்லாசம் பாரேனோ
பாங்கான தண்டை பல அணியும் பாரேனோ
வீர கண்டாமணியின் வெற்றிதனைப் பாரேனோ
சூரர் கண்டு போற்றும் அந்தச் சுந்தரத்தைப் பாரேனோ
இடையில் புலித்தோல் இருந்த நலம் பாரேனோ
விடையில் எழுந்தருளும் வெற்றியினைப் பாரேனோ
No comments:
Post a Comment