Wednesday, 29 April 2020

ஶ்ரீ க்ருஷ்ணாஷ்டகம்

ஶ்ரீ க்ருஷ்ணாஷ்டகம்  
வஸுதேவ ஸுதம் தேவம்
             கம்ஸ சாணூர மர்தனம் |
தேவகீ பரமா னந்தம்
             க்ருஷ்ணம்  வந்தே ஜகத் குரும் || 1||

அதஸீ புஷ்ப ஸங்காஶம் 
             ஹாரனூ புர ஶோபிதம் |
ரத்ன கண்கண கேயூரம் 
           க்ருஷ்ணம்  வந்தே ஜகத் குரும் || 2 ||

குடிலா லகஸம யுக்தம்  
          பூர்ண சந்த்ர னிபானனம் |
விலஸத் குண்ட லதரம் 
         க்ருஷ்ணம்  வந்தே ஜகத் குரும் || 3 ||

மந்தார கந்த ஸம்யுக்தம் 
        சாரு ஹாஸம் சதுர்புஜம் |
பர்ஹி பிஞ்சா வசூடாங்கம்
       க்ருஷ்ணம்  வந்தே ஜகத் குரும் || 4 ||

உத்புல்ல பத்ம பத்ராக்ஷம்
         நீல ஜீமூத ஸன்னிபம் |
யாத வானாம் ஶிரோரத்னம்
        க்ருஷ்ணம்  வந்தே ஜகத் குரும் || 5 ||

ருக்மிணீ கேளி ஸம்யுக்தம் 
        பீதாம்பர ஸுஶோ பிதம் |
அவாப்த துலஸ கந்தம்
        க்ருஷ்ணம்  வந்தே ஜகத் குரும் || 6 ||

கோபிகானாம் குசத் வந்த்வ 
        குங்குமாங்கித வக்ஷ ஸம் |
ஶ்ரீ நிகேதம் மஹேஷ் வாஸம்
        க்ருஷ்ணம்  வந்தே ஜகத் குரும் || 7 ||

ஶ்ரீவத் ஸாங்கம்  மஹோரஸ்கம 
         வன மாலா விராஜிதம் |
ஶங்க சக்ரதரம் தேவம்
         க்ருஷ்ணம்  வந்தே ஜகத் குரும் || 8 ||


ஹரி ஓம் !!!

Wednesday, 22 April 2020

தேடல்

தேடல்



இறைவனை எங்கும் தேட வேண்டாம் !
உங்களுக்கு உள்ளேயும் தேட வேண்டாம் !

பறந்து செல்லும் பறவை
பாடிச் செல்லும் காற்று
அமைதியான  நதி 
ஆர்ப்பரிக்கும் கடல் 
அழகான  அருவி  
சோர்வில்லாத  சூரியன் 

மறைந்தாலும்  வளரும்  நிலவு

இவற்றை என்றாவது நிச்சலனமாய்
வேடிக்கைப் பார்த்ததுண்டா ?

அது போறும் !

இதன் அடிப்படையில்
நீங்கள், உங்களையே
நிச்சலனமாய்
வேடிக்கைப் பாருங்கள் !

ஆனந்தக் கூத்தனின்
ஆட்டம் புரியும் !
தேடியதும் கிடைக்கும் !

ஹரி ஓம் !!

Tuesday, 21 April 2020

பட்டினத்தார் - பூரண மாலை ( 1 )

பட்டினத்தார்  பாடல்கள் 

பூரண  மாலை.



மூலத்   துதித்தெழுந்த  
                 முக்கோனச்  சக்கரத்துள்  
வாலைதனைப் போற்றாமல்  
                 மதி  மறந்தேன்  பூரணமே !!                        1


உந்திக்   கமலத்துதித்து 
                  நின்ற  பிரமாவைச் 
சந்தித்து  காணாமல்  
                  தட்டழிந்தேன்    பூரணமே                           2


நாவிக்  கமல  
                 நடு நெடுமால்  காணாமல் 
ஆவி கெட்டு  யானும்  
                அறிவிழந்தேன்  பூரணமே                            3


உருத்திரனை  இருதயத்தில் 
                உண்மையுடன்  பாராமல்  
கருத்தழிந்து  நானும் 
                கலங்கினேன்  பூரணமே                               4


விசுத்தி  மகேசுரனை  
                விழிதிறந்து  பாராமல் 
பசித்துருகி  நெஞ்சம்  
                பதறினேன்  பூரணமே                                     5


தொடரும் ....

Saturday, 18 April 2020

வினை தீர்க்கும் விநாயகன்

வினை தீர்க்கும் விநாயகன் 


மூலாதாரத்திற்கு உரியவராக 
விளங்கும் விநாயகப்பெருமான் 
முழுமுதல் கடவுளாக 
விளங்குகிறார். 

இவரை வணங்கி விட்டே 
எச்செயலையும் தொடங்குவர். 
எந்த சுபவிஷயத்தை செய்யத் 
தொடங்கினாலும், 
பிள்ளையாருக்கு சிதறுகாய் 
போட்டு,அப்பனே! விநாயகனே! 
தொடங்கும் செயல் தடையேதும் 
இல்லாமல் இனிதே நிறைவேற்றி 
அருள்வாய்! என்று 
வணங்கிவிட்டே செயல்படுவர். 

எழுதத் தொடங்கினாலும், 
பிள்ளையார் சுழி போட்டு 
செயல் எதுவும் தொடங்கு 
என்று குழந்தைகளுக்கு 
வீட்டுப் பெரியவர்கள் 
அந்த காலத்தில் வழிகாட்டினர். 

விநாயகரும் சிறந்த எழுத்தாளராகப்
 பணியாற்றி இருக்கிறார். 
தன் தந்தத்தை ஒடித்து 
எழுத்தாணியாக்கி வியாசர் 
சொல்ல மகாபாரதத்தை 
எழுதியவர் விநாயகர். 

சதுர்த்திநாளில் வணங்குவோருக்கு 
விநாயகப் பெருமானின் அருளால் 
செல்வாக்கும், சொல்வாக்கும் 
உண்டாகும்.


மஞ்சளில் பிடித்த பிள்ளையாரை 
வழிபட்டால் திருமண தடை நீங்கும். 

மண் பிள்ளையாரைப் பூஜித்தால் 
நல்ல பதவி கிடைக்கும்.  

புற்று மண்ணில் செய்த 
பிள்ளையாரை பூஜித்தால் 
வியாபாரத்தில் நல்ல லாபத்தை 
அடையலாம். 

வெல்லத்தால் செய்த பிள்ளையாரை 
பூஜித்தால் சகல பாக்கியத்தையும் 
அடையலாம். 

உப்பினால் செய்த பிள்ளையாரை 
வணங்கினால் எதிரிகளை 
வெல்லலாம். 

வெள்ளெருக்குப் பிள்ளையாரை 
பூஜித்தால் ஞானம் பெறலாம். 

பசுஞ்சாணியால் பிள்ளையார் 
செய்து பூஜித்தால் எண்ணிய 
காரியங்கள் கைகூடும். 

வெண்ணெயில் பிள்ளையார் 
செய்து பூஜித்தால் நோய்கள் நீங்கும்.


 விநாயகருக்கு மோதகம், கரும்பு, 
அவல், பொரி ஆகியவற்றைப் 
படைக்க வேண்டும். 

இந்த நிவேதனப் பொருட்களுக்குள் 
பெரும் தத்துவம் அடங்கிகிடக்கிறது. 
அது என்ன என்பதை தெரிந்து 
படைத்தால் வாழ்க்கையே வளமாகும்.

நிவேதனம் நமக்கு சொல்வது என்ன:

மோதகம்: இதன் வெளிப்பகுதி 
வெள்ளையாகவும், உள்ளே 
மஞ்சள் நிற இனிப்பு பூரணமும் 
இருக்கிறது. மனதை வெள்ளையாக 
வைத்துக் கொண்டால், கண்ணுக்குத் 
தெரியாத இறைவனை அடையலாம் 
என்ற தத்துவத்தின் அடிப்படையில் 
படைக்கப்படுகிறது.

கரும்பு: கடிப்பதற்கு கடினமானாலும் 
இனிப்பானது. வாழ்க்கையும் இப்படித்தான். 
கஷ்டப்பட்டால் இனிமையைக் காணலாம் எ
ன்ற தத்துவத்தின் படி படைக்கப்படுகிறது.

அவல், பொரி: ஊதினாலே 
பறக்கக்கூடியவை இப்பொருள்கள். 
வாழ்க்கையில் நாம் சந்திக்கின்ற 
துன்பங்களை ஊதித்தள்ளி 
விட வேண்டும் என்பதைக் குறிக்கிறது.

ஹரி ஓம் !!!!



திரிகரணசுத்தி

திரிகரணசுத்தி




கோயிலுக்கு செல்லும் எல்லாருக்கும் 
பலனுண்டா?

கோயிலுக்குச் செல்லும் எல்லாருக்கும் 
பலன் கிடைக்கிறதா என்றால் 
ஓரளவுக்குத்தான்  கிடைக்கிறது. 


காரணம், திரிகரணசுத்தியுடன் இறைவனை 
யாரும் வணங்குவதில்லை. 

திரிகரணசுத்தி என்றால் என்ன? 
மனிதனுக்கு பொறாமை, கோபம், ஆசை, 
பகை முதலிய குணங்கள் உள்ளன. 
இவற்றை தியானம் என்ற தீர்த்தத்தாலும், 

பொய், கோள்மூட்டுதல், தீயசொல் 
ஆகியவற்றை ஸ்லோகங்கள், பாடல்கள் 
உள்ளிட்ட துதி என்னும் தீர்த்தத்தாலும், 

களவு, கொலை, பிறன்மனை காணுதல் 
ஆகிய அழுக்குகளை அர்ச்சனை என்ற 
தீர்த்தத்தாலும் கழுவ வேண்டும். 

இதுவே திரிகரணசுத்தி எனப்படுகிறது. 
இவற்றையெல்லாம் கழுவாமல், 
ஆயிரங்களையும், லட்சங்களையும் 
கொட்டி பூஜை செய்வதால் 
பயனேதும் இருக்காது. 

பலனடைய வேண்டுமானால் 
திரிகரணசுத்தி செய்யுங்கள். 
பலனை  அடையுங்கள்.


ஹரி ஓம் !!!

நீ முன்னாலே போன நான் பின்னாலே வாரேன்

நீ முன்னாலே போன 
நான் பின்னாலே வாரேன்




யார் பின்னால் போக வேண்டும், 
யாருக்கு வழிவிட்டு ஒதுங்கி நிற்க 
வேண்டும் என்று சாஸ்திரம் சில
 விதிகளைச் சொல்லியிருக்கிறது.

*  பஞ்சமகா யக்ஞம் எனப்படும் ஐந்து 
வகை யாகங்களை தவறாமல் செய்யும் 
ஒரு வேதியர் வந்தால் அவருக்கு வழிவிட்டு 
பின்னால் செல்ல வேண்டும்.
*  கர்ப்பவதி வந்தால் அவளுக்கு 
வழிவிட்டு பின்னால் போ.
*  பசுக்கள் பின்னால் வந்தால், 
அதற்கு வழிவிட்டு பின்னால் போ.
*  யானை பின்னால் வந்தால், 
அதை முதலில் விட்டு பின்னால் நட.
*  தலையில் கனமான பொருளை 
எடுத்துக் கொண்டு ஒருவர் பின்னால் 
வந்தால், அவருக்கு வழிவிட்டு 
தொடர்ந்து செல். 

இவற்றில் பசுக்களின் பின்னால் சென்றால், 
அதன் பாததூளி (தூசு) நம் மீது பட்டு 
உடல் சுத்தம், பேச்சில் சுத்தம், 
மனச்சுத்தம் ஏற்படுவதாக ஐதீகம்.

ஹரி ஓம் !


இரட்டை ஜடை

இரட்டை ஜடை



பெண்கள் இரட்டை ஜடை போடக்கூடாது: 
சொல்கிறது சாஸ்திரம்

காலையில் எழுந்தவுடன் கண்ணாடி 
முன் சென்றாள் என் மகள். இன்னும் 
தலைவாரி முடியவில்லை. 
அவிழ்த்து அவிழ்த்து ஒவ்வொரு 
ஸ்டைலில் கட்டிப் பார்க்கிறாள்...
எப்போ முடியப்போகுதோ 
இந்த சிகை அலங்காரம்,என்று 
புலம்புகிற தாய்மார்கள் ரொம்பவே 
பெருகி விட்டார்கள். இவர்கள் 
பியூட்டி பார்லர்களுக்குச் சென்று, 
விதவிதமாக கத்தரித்துக் கொள்கிறார்கள்.

கலியுகத்தில் இப்படியெல்லாம் 
நடக்குமென்று விஷ்ணுபுராணத்தில் 
பராசர மகரிஷியே சொல்லியிருக்கிறார். 
சிகை அலங்காரம் பற்றி அவர் 
சொல்வதைக் கேளுங்கள். 

பெண்கள் நேர்வகிடு எடுத்துக்கொள்ள 
வேண்டும். கோணல் வகிடு கூடாது. 
கூந்தலை இரண்டாகப் பிரித்து 
இரட்டை  பின்னல் போடக்கூடாது. 
இதனால், குடும்பம் இரண்டுபடும் 
(பல பள்ளிகளில் இரட்டை ஜடை  
இன்றும் இருக்கிறது...சாஸ்திரம் 
தெரியாததால்) 

கூந்தலை அவிழ்த்துப் போடக்கூடாது. 
குளித்ததும், ஈரம் சொட்டச்சொட்ட 
வீட்டுக்குள் வரக்கூடாது. துடைத்து 
துவட்டி வர வேண்டும். 

வேற வேலையில்லே! 
காலம் போகிற போக்கிலே 
இதையெல்லாம் கவனிக்க முடியுமா! 
என்பவர்களுக்கு பாஷாண்டிகள் 
என்று பட்டப்பெயர் வைத்துள்ளது 
சாஸ்திரம். 

(இதிலிருந்து தான் பேஷன் என்ற 
ஆங்கிலச்சொல் வந்ததோ!) 
இதற்கு என்ன அர்த்தம் தெரியுமா? 
இறையருள் இல்லாதவர்கள், 
நாத்திகம் பேசுபவர்கள். இவர்களுக்கு 
தன்னை வணங்கும் பாக்கியத்தை 
ஆண்டவன் தரமாட்டான் என்கிறார் 
பராசர மகரிஷி.


ஹரி ஓம் !

பூஜையும் மலர்களும்

பூஜையும் மலர்களும் 




காலங்களுக்கேற்ற புஷ்பங்கள் : 

காலை
தாமரை, பொரசு, துளசி, நவமல்லிகை, 
நந்தியாவட்டை, மந்தாரை, முல்லை, 
சண்பகம், புன்னாகம், , 

நண்பகல்
வெண்தாமரை, அரளி, பொரசு, துளசி, 
வில்வம், சங்கபுஷ்பம், மருதாணி, 

மாலை
செந்தாமரை, அல்லி, மல்லிகை, ஜாதி
 முல்லை, மருக்கொழுந்து, வெட்டிவேர், 
கஜகர்ணிகை, துளசி, வில்வம்.

அஷ்ட புஷ்பங்கள் : 
அறுகு, சண்பகம், பன்னாகம், 
நந்தியாவட்டை, பாதிரி, ப்ரஹதி, 
அரளி, தும்பை இலைகள்.

எடுக்கப்பட்ட புஷ்பங்களின் 
உபயோக நாட்கள் : 
தாமரை - 5 நாட்கள், 
அரளி - 3 நாட்கள், 
வில்வம் - 6 மாதம், 
துளசி - மூன்று மாதம், 
சண்பகம் - 1 நாள், 
விஷ்ணுக்ரந்தி - 3 நாள், 
விளாமிச்சை - எப்போதும்.

உபயோகப் படுத்தக் கூடாத புஷ்பங்கள்

கையில் கொண்டு வந்தது, 
தானாக விழுந்தது, 
கொட்டை (ஆமணக்கு) அல்லது 
எருக்க இலைகளில் கட்டிக் கொண்டு 
வந்தது, வாசனை அற்றது, 
மயிர் கலந்து கிடந்தது, புழு இருந்தது, 
மிகக் கடுமையான வாசனை உள்ளது, 
வாடியது, நுகரப்பட்டது, 
தானாக மலராமல் செயற்கையாக 
மலரச் செய்யப்பட்டது, 
அசுத்தமான முறையில் எடுத்து வரப்பட்டது, 
ஈர வஸ்திரத்துடன் எடுத்து வரப்பட்டது. 
யாசித்துப் பெறப்பட்டது, 
பூமியில் விழுந்து கிடந்தது ஆகியன. 
பொதுவாக, மலராத மொட்டுக்கள் 
(சம்பக மொட்டு நீங்கலாக) 
பூஜைக்கு உதவா.

துளசி, முகிழ், சண்பகம், 
தாமரை, வில்வம், கல்ஹாரம், 
மருக்கொழுந்து, மருதாணி, 
தருப்பை, அருகு, அஸிவல்லி, 
நாயுருவி, விஷ்ணுக்ரந்தி, நெல்லி - 
ஆகிய செடி கொடி, மரங்களின் 
இலைகள் (பத்ரங்கள்) பூஜைக்கு 
உதவும்.

அக்ஷதை, வெள்ளெருக்கு, ஊமத்தை 
இவை விஷ்ணு பூஜைக்கு ஆகாது. 

செம்பருத்தி, தாழம்பூ குந்தம், 
கேஸரம், குடஜம், ஜபா புஷ்பம் 
இவை சிவனுக்கு சுகாது. 

அறுகு, வெள்ளெருக்கு மந்தாரம் - 
இவை அம்பாளுக்குக் கூடாது. 

துளசி விநாயகருக்கு ஆகாது.
புஷ்பங்களைக் கவிழ்த்துச் 
சாத்தக்கூடாது; ஆனால் 
புஷ்பாஞ்சலியின்போது மலர்கள் 
கவிழ்ந்து விழுவது தவறல்ல. 
புஷ்பச் சேதம் செய்யக் கூடாது. 
அதாவது, ஒரு மலரை சிறிது 
சிறிதாகக் கிள்ளியோ வெட்டியோ 
பயன்படுத்தக் கூடாது.


ஹரி ஓம் !

சிவதன்மம்

சிவதன்மம்



சிவதன்மம் என்றால் 
சைவ ஒழுக்கம் என்று பொருள். 

சிதம்பரம் மறைஞானதேசிகர் (
கி.பி.1560) சிவாகம பரிபாஷா 
மஞ்சரி என்ற வடமொழி நூலில் 
சிவதன்மம் பத்துக் 
கோட்காடுகளைக் கொண்ட 
நெறி என்கிறார்: 

1. அஹிம்சை. 
2. தயை, 
3. சத்யம், 
4. அடக்கம் 
5. வளம், 
6. புலனடக்கம் 
7. எளியோர்க்கு வழங்குதல், 
8. தியாகம், 
9. ஜபம், 
10. தியானம் - 

அல்லது 

1. அஹிம்சை, 
2. சத்யம், 
3. பிறர் பொருள் விழையாமை, 
4. சிற்றின்பம் துறத்தல், 
5. அவா ஒழித்தல், 
6. க்ரோதம் தவிர்த்தல், 
7. பெரியோரைப் போற்றுதல், 
8. தூய்மை, 
9. துயறுற்றலும் மகிழ்வுடன் இருத்தல், 
10. நேர்மை 

என்றபடி. இக்கோட்பாடுகள் 
அனைத்தும் ஆலய வழிபாட்டு 
நெறிக்கும் இன்றியமையாததாக 
இருப்பது கவனிக்கத் தக்கது.


ஹரி ஓம் !