பட்டினத்தார் பாடல்கள்
பூரண மாலை.
மூலத் துதித்தெழுந்த
முக்கோனச் சக்கரத்துள்
வாலைதனைப் போற்றாமல்
மதி மறந்தேன் பூரணமே !! 1
உந்திக் கமலத்துதித்து
நின்ற பிரமாவைச்
சந்தித்து காணாமல்
தட்டழிந்தேன் பூரணமே 2
நாவிக் கமல
நடு நெடுமால் காணாமல்
ஆவி கெட்டு யானும்
அறிவிழந்தேன் பூரணமே 3
உருத்திரனை இருதயத்தில்
உண்மையுடன் பாராமல்
கருத்தழிந்து நானும்
கலங்கினேன் பூரணமே 4
விசுத்தி மகேசுரனை
விழிதிறந்து பாராமல்
பசித்துருகி நெஞ்சம்
பதறினேன் பூரணமே 5
தொடரும் ....
No comments:
Post a Comment