விநாயகர் காரிய சித்தி மாலை
பாடல் 1
விநாயகர் காரிய சித்தி மாலை, |
| ஓர் ஒப்பற்ற மந்திரம். இதனை |
| காஷ்யப முனிவர் வடமொழியில் |
| இயற்றினார். அதை கச்சியப்ப |
| முனிவர் தமிழில் மொழி |
| பெயர்த்தார். |
| எந்தப் பணியை ஆரம்பித்தாலும் |
| விநாயகரை வணங்கி |
| ஆரம்பிப்பது நம் மக்களின் |
| வழக்கம். எழுதுவதற்கு முன் |
| குட்டியாக ஒரு பிள்ளையார் |
| சுழி போட்டுவிட்டு எழுதத் |
| தொடங்குவதும் பலருக்கு |
| வழக்கம். விக்னமில்லாமல் |
| முடிய வேண்டிய எந்த |
| வேலைக்கும் விக்னேஸ்வரரின் |
| அருள் கட்டாயம் வேண்டும். |
| அன்றைய கடமைகள் |
| என்றில்லாமல், வாழ்நாள் |
| முழுவதும் மகிழ்ச்சி பொங்கவும் |
| எதிர்ப்படும் பிரச்னைகளை |
| எளிதாகக் கையாளவும், |
| முறையாகத் திட்டமிடவும், |
| அனைவரிடமும் அன்பு |
| செலுத்தவும் , அனைவரது |
| அன்பும் நம் மீது பரவவும், |
| சுமூகமான வாழ்வை |
| சந்தோஷமாக மேற்கொள்ளவும் |
| இந்த விநாயகர் காரிய சித்தி |
| மாலையை தினமும் ஜபிப்பது |
| அவசியம் என்று |
| வலியுறுத்துகிறார் காஷ்யப |
| முனிவர். |
| இந்த பாடல் முற்றிலும் |
| தமிழிலேயே அமைந்துள்ளது. |
| எளிமையானது. நேரடியானது. |
| நாமே எளிதில் பொருள் புரிந்து |
| கொள்ளலாம். |
| காரிய சித்தி மாலை |
பாடல் 1
|
பந்தம்
அகற்றும் அநந்தகுணப் பரப்பும் எவன்பால் உதிக்குமோ
|
|
எந்த உலகும்
எவனிடத்தில் ஈண்டி இருந்து கரக்குமோ
|
|
சந்தமறை
ஆகமம் கலைகள் அனைத்தும் எவன்பால் தகவருமோ
|
|
அந்த இறையாம்
கணபதியை அன்பு கூரத் தொழுகின்றோம்
பாடல் 2 :
உலகமுழுவதும் நீக்கமற ஒன்றாய் நிற்கும்பொருள் எவன் அவ்
உலகிற்பிறக்கும் விவகாரங்கள் உறாதமேலாம் ஒளியாவன்?
உலகம் புரியும் வினைப் பயனை ஊட்டும் களைகண் எவன் அந்த
உலக முதலைக் கணபதியை உவந்து சரணம் அடைகின்றோம்.
பாடல் 3 :
|
இடர்கள் முழுதும் எவனருளால்
எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால்
சுரர்வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி
கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவுமருப்புக் கணபதி பொன்
சரணம் அடைகின்றோம்.
பாடல் 4 :
மூர்த்தியாகித் தலமாகி முந்நீர்
கங்கை முதலான
தீர்த்தமாகி அறிந்தறியாத்
திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்திநாளும் அறியாமை அகற்றி
அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
பாடல் 5 :
செய்யும் வினையின் முதல்யாவன்
செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஐயமின்றி உளதாகும் அந்தக்
கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில்
ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யி இறையைக் கணபதியைப்
புரிந்து சரணம் அடைகின்றோம்
பாடல் 6 :
வேதம் அளந்தும் அறிவரிய
விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும்
விமலன் யாவன் விளங்குபர
நாதமுடிவில் வீற்றிருக்கும் நாதன்
எவன் எண்குணன் எவன் அப்
போத முதலைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
பாடல் 7 :
மண்ணின் ஓர் ஐங்குணமாகி வதிவான்
எவன் நீரிடை நான்காய்
நண்ணி அமர்வான் எவன் தீயின்
மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி இயைவான்
எவன் வானிடை ஒன்றாம்
அண்ணல் எவன் அக்கணபதியை
அன்பிற் சரணம் அடைகின்றோம்.
பாடல் 8 :
பாச அறிவில் பசுஅறிவில்
பற்றற்கரிய பரன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும் பயிலப்
பணிக்கும் அவன்யாவன்
பாச அறிவும் பசுஅறிவும்
பாற்றி மேலாம் அறிவான
தேசன் எவன் அக்கணபதியைத்
திகழச் சரணம் அடைகின்றோம்.
நூற்பயன் பாடல் விளக்கம்
| இத்தோத்திரப் பாடல்களை மூன்று நாட்கள் சந்தியா நேரத்தில் யார் பாராயணம் செய்கின்றார்களோ, அவர்கள் செய்யும் நற்காரியங்களில் வெற்றி பெறுவார்கள். |
|
தொடர்ந்து
எட்டு நாட்களில் படித்தால் மனம் மகிழும் படியான நலம் பெறுவார்கள்.
|
|
சதுர்த்தியன்று
நற்சிரத்தையுடன் எட்டுத்தடவைகள் பாராயணம் செய்தால் அணிமா, மகிமா, லகுமா, கரிமா,
பிராப்தி, பிராகாமியம், ஈசத்துவம், வசித்துவம் போன்ற (எட்டு) அஷ்டமா
சித்திகளையும் பெறுவார்கள்.
|
|
மேற்கண்ட
காரியசித்திமாலையை தொடர்ந்து 3 நாட்கள் சூரிய உதயத்திற்கு முன்பாகவும், சூரியன்
மறைந்த பின்பும் 1 முறை பாராயணம் செய்தால் அவர்கள் செய்யும் செயல்களில் (நல்ல
செயல்கள்) தோல்வி என்பதே இல்லாமல் வெற்றி கிட்டும். கெட்ட செயல்கள் செய்தால்
விளைவு எதிர்மறையாகத் தான் இருக்கும்.
|
|
தொடர்ந்து 8
நாட்கள் படித்து வர மன உளைச்சல் நீங்கி நிம்மதியை பெறுவர். சக்தியின் மைந்தன்
விநாயகர் உங்களின் மன துன்பங்களை அறவே நீக்குவார். மனநிம்மதியில்லாதவர்கள் இதை
படித்து வந்தால் மனநிம்மதி பெறுவர் என்பது திண்ணம்.
|
|
சதுர்த்தி
நாளில் நல்ல சிந்தனையுடன் 8 முறை இதை படித்து வர அட்டமாசித்திகளும் கிட்டும்.
தொடர்ந்து 60 நாட்கள் விடாமல் 1 முறை இதை படித்து வர அரச வசியம் உண்டாகும்.
தினமும் 21 முறைகள் படித்து வர குழந்தைச் செல்வம் மற்றும் கல்விச் செல்வம்
கிட்டும்.
|
ஹரி ஓம் !!!
No comments:
Post a Comment