Saturday, 18 April 2020

இறைவனை அடையும் வழிகள்

றைவனை அடையும் வழிகள் 



இறைவனை அடையும் வழிகள் 
ஒன்பது என்பர்: 

(1) ச்ரவணம் - 
கேட்டல், இறைவன் புகழ் கேட்டல் -
 உதாரணம்: ஹனுமான், 

(2) கீர்த்தனம் - பாடுதல், நாதோபாஸனை 
- உதாரணம்: வால்மீகி, 
தியாகராஜ ஸ்வாமிகள். 

(3) ஸ்மரணம் - நினைத்தல், 
நின்றும் இருந்தும் கிடந்தும் 
அவனையே நினைப்பது - 
உதாரணம்; ஸீதாதேவி, 

(4) பாதசேவனம் - சேவித்தல் - 
உதாரணம்: பரதன், 

(5) அர்ச்சனம் - பூஜித்தல் - 
உதாரணம்: சபரி, கண்ணப்ப நாயனார், 
சாக்கிய நாயனார், 

(6) வந்தனம் - நமஸ்கரித்தல், 
வந்தித்தல் - 
உதாரணம்: விபீஷணன். 

(7) தாஸ்யம் - தொண்டு புரிதல் - 
உதாரணம்: லக்ஷ்மணன், 
திருநாவுக்கரசர். 

(8) ஸக்யம் - சிநேக பாவம் - 
உதாரணம்: சுக்ரீவன், 
அர்ஜுனன், சுந்தரர். 

(9) ஆத்ம நிவேதநம் - 
தன்னையே அர்ப்பணித்தல் - 
உதாரணம்: ஜடாயு. 

இந்த ஒன்பது வழிகளுள் ஏதாவது 
ஒன்றை உறுதியாகப் பற்றுவதே 
இறைவனை அடைவதற்கு  
போதுமானது. இவற்றுள் கடைசி 
இரண்டைத் தவிர, ஏழு முறைகளில் 
வழிபட ஆலயங்களே வகை 
செய்வது குறிப்பிடத்தக்கது.


ஹரி ஓம் !

No comments:

Post a Comment