பட்டினத்தார் பாடல்கள்
பூரண மாலை
ஊனுக்குள் நீ
நின்று உலாவினதைக் காணாமல்
நானென்று இருந்து
நலம் இழந்தேன் பூரணமே ! 11
மெய்வாழ்வை நம்பி
விரும்பி மிக வாழாமல் ,
பொய் வாழ்வை நம்பிப்
புலம்பினேன் பூரணமே ! 12
பெண்டுபிள்ளை தந்தைதாய்
பிறவியுடன் சுற்றம் இவை
உண்டென்று நம்பி
உடலழிந்தேன் பூரணமே ! 13
இந்த உடல் உயிரை
எப்போதும்தான் சதமாய்
பந்தமுற்று நானும்
பதமிழ்ந்தேன் பூரணமே ! 14
தண்டிகை பல்லக்குடனே
சகலமும் பந்துக்களும்
உண்டென்று நம்பி
உணர்விழந்தேன் பூரணமே ! 15
மாதர் பிரபஞ்ச
மயக்கத்திலே விழுந்து
போத மயங்கி
பொறியழிந்தேன் பூரணமே ! 16
சரியை கிரியா யோகந்தான்
ஞானம் பாராமல்
பரிதி கண்ட மதியதுபோல்
பயனழிந்தேன் பூரணமே ! 17
மண் பெண் பொன்னாசை
மயக்கத்திலே விழுந்து
கண்கெட்ட மாடாது போல்
கலங்கினேன் பூரணமே ! 18
தனிமுதலைப் பார்த்து
தனித்திருந்து வாழாமல்
அனியாயமாய் பிறந்திங்கு
அலைந்துநின்றேன் பூரணமே ! 19
ஈராறு தன் கலைக்குள்
இருந்து கூத்தாடினதை
ஆராய்ந்து பாராமல்
அறிவிழந்தேன் பூரணமே ! 20
தொடரும் .....
பூரண மாலை
ஊனுக்குள் நீ
நின்று உலாவினதைக் காணாமல்
நானென்று இருந்து
நலம் இழந்தேன் பூரணமே ! 11
மெய்வாழ்வை நம்பி
விரும்பி மிக வாழாமல் ,
பொய் வாழ்வை நம்பிப்
புலம்பினேன் பூரணமே ! 12
பெண்டுபிள்ளை தந்தைதாய்
பிறவியுடன் சுற்றம் இவை
உண்டென்று நம்பி
உடலழிந்தேன் பூரணமே ! 13
இந்த உடல் உயிரை
எப்போதும்தான் சதமாய்
பந்தமுற்று நானும்
பதமிழ்ந்தேன் பூரணமே ! 14
தண்டிகை பல்லக்குடனே
சகலமும் பந்துக்களும்
உண்டென்று நம்பி
உணர்விழந்தேன் பூரணமே ! 15
மாதர் பிரபஞ்ச
மயக்கத்திலே விழுந்து
போத மயங்கி
பொறியழிந்தேன் பூரணமே ! 16
சரியை கிரியா யோகந்தான்
ஞானம் பாராமல்
பரிதி கண்ட மதியதுபோல்
பயனழிந்தேன் பூரணமே ! 17
மண் பெண் பொன்னாசை
மயக்கத்திலே விழுந்து
கண்கெட்ட மாடாது போல்
கலங்கினேன் பூரணமே ! 18
தனிமுதலைப் பார்த்து
தனித்திருந்து வாழாமல்
அனியாயமாய் பிறந்திங்கு
அலைந்துநின்றேன் பூரணமே ! 19
ஈராறு தன் கலைக்குள்
இருந்து கூத்தாடினதை
ஆராய்ந்து பாராமல்
அறிவிழந்தேன் பூரணமே ! 20
தொடரும் .....


No comments:
Post a Comment