பட்டினத்தார் பாடல்கள்
பூரண மாலை
வாசிதனைப் பார்த்து மகிழ்ந்து
உனைத்தான் போற்றாமல்
காசிவரை போய் திரிந்து
கால் அலுத்தேன் ...... பூரணமே ! 21
கருவிகள் தொன்னூற்றாறில்
கலந்து விளையாடினதை
இருவிழியால் பாராமல்
ஈடழிந்தேன் ................ பூரணமே ! 22
உடலுக்குள் நீதி
நின்று உலாவிதனைக் காணாமல்
கடல் மலை தோறும் திரிந்து
கால் அலுத்தேன் ........ பூரணமே ! 23
எத்தேச காலமும்
நாம் இறவாது இருப்போம் என்று
உற்று உனைத்தான் பாராமல்
உருவழிந்தேன் ........ பூரணமே ! 24
எத்தனை தாய் தந்தை
இவர்களிடத்தே இருந்து
பித்தனாய் யானும்
பிறந்து இறந்தேன் ....... பூரணமே ! 25
பெற்று அலுத்தார் தாயார்
பிறந்தலுத்தேன் நானும், உந்தன்
பொற்றுணைத்தாள் தந்து
புகழ் அருள்வாய் ....... பூரணமே ! 26
உற்றார் அழுது அலுத்தார்
உறன்முறையார் சுட்டு அலுத்தார்
பெற்று அலுத்தார் தாயார்
பிறந்து அலுத்தேன் .......... பூரணமே ! 27
பிரமன் படைத்து அலுத்தான்
பிறந்து இறந்து நான் அலுத்தேன்
உரமுடைய அக்கினிதான்
உண்டு அலுத்தான் ............ பூரணமே ! 28
எண்பத்து நானூறு ஆயிரம்
செனனமும் செனித்து
புண்பட்டு நானும்
புலம்பினேன் .............. பூரணமே ! 29
என்னை அறியாமல்
எனக்குள்ளே நீ இருக்க
உன்னை அறியாமல்
உடல் அழிந்தேன் .......... பூரணமே ! 30
தொடரும் ........
பூரண மாலை
வாசிதனைப் பார்த்து மகிழ்ந்து
உனைத்தான் போற்றாமல்
காசிவரை போய் திரிந்து
கால் அலுத்தேன் ...... பூரணமே ! 21
கருவிகள் தொன்னூற்றாறில்
கலந்து விளையாடினதை
இருவிழியால் பாராமல்
ஈடழிந்தேன் ................ பூரணமே ! 22
உடலுக்குள் நீதி
நின்று உலாவிதனைக் காணாமல்
கடல் மலை தோறும் திரிந்து
கால் அலுத்தேன் ........ பூரணமே ! 23
எத்தேச காலமும்
நாம் இறவாது இருப்போம் என்று
உற்று உனைத்தான் பாராமல்
உருவழிந்தேன் ........ பூரணமே ! 24
எத்தனை தாய் தந்தை
இவர்களிடத்தே இருந்து
பித்தனாய் யானும்
பிறந்து இறந்தேன் ....... பூரணமே ! 25
பெற்று அலுத்தார் தாயார்
பிறந்தலுத்தேன் நானும், உந்தன்
பொற்றுணைத்தாள் தந்து
புகழ் அருள்வாய் ....... பூரணமே ! 26
உற்றார் அழுது அலுத்தார்
உறன்முறையார் சுட்டு அலுத்தார்
பெற்று அலுத்தார் தாயார்
பிறந்து அலுத்தேன் .......... பூரணமே ! 27
பிரமன் படைத்து அலுத்தான்
பிறந்து இறந்து நான் அலுத்தேன்
உரமுடைய அக்கினிதான்
உண்டு அலுத்தான் ............ பூரணமே ! 28
எண்பத்து நானூறு ஆயிரம்
செனனமும் செனித்து
புண்பட்டு நானும்
புலம்பினேன் .............. பூரணமே ! 29
என்னை அறியாமல்
எனக்குள்ளே நீ இருக்க
உன்னை அறியாமல்
உடல் அழிந்தேன் .......... பூரணமே ! 30
தொடரும் ........


No comments:
Post a Comment