ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டோத்திரம்.
{தமிழ் விளக்கத்துடன்}*
28.ஓம் அக்னி ஜன்மனே நமஹ: -
அக்கினிச் சுடராக பிறந்தவர்.
29. ஓம் விசாகாய நமஹ: -
விசாக நக்ஷத்திரத்தில் உதித்தவர்.
30. ஓம் சங்கராத்மஜாய நமஹ: -
எல்லோருக்கும் மங்களத்தைக் கொடுக்கும் ஈசனின் புதல்வர்.
31. ஓம் சிவஸ்வாமிநே நமஹ: -
தந்தையாகிய சிவனுக்கு உபதேசம் செய்ததால் சிவஸ்வாமி என பெயர் பெற்றவர்.
32. ஓம் கணஸ்வாமிநே நமஹ: -
சிவ கணங்களை கொண்ட சேனையின் தலைவர்.
33. ஓம் ஸர்வஸ்வாமிநே நமஹ: -
ஜீவர்கள், ஜடப்பொருள்கள் உட்பட உலகம் முழுவதையும் தமது சொத்தாக்க் கொண்டிருப்பவர். எல்லோருக்கும் அருள் புரிபவர், எல்லோருக்கும் அருள் புரியும் உயர்ந்த தெய்வம் என்று கொண்டாடப்படுபவர். ஏற்ற தாழ்வு இல்லாத ஸர்வஸ்வாமி {உலக அதிபதி} என பெயர் பெற்றவர்.
34. ஓம் ஸநாதனாய நமஹ: -
மிகவும் பழமையானவர்.
35. ஓம் அனந்த சக்தயே நமஹ: -
அளவற்ற ஆற்றல் படைத்தவர்.
36. ஓம் அக்ஷோப்பியாய நமஹ –
விருப்பு-வெறுப்பு போன்றவைகளால் {அல்லது எதிரிகளால் சலனமடையாதவர்.}
தொடரும் ....

No comments:
Post a Comment