Sunday, 7 June 2020

பட்டினத்தார் - முதல்வன் முறையீடு, ( 7 )

பட்டினத்தார் பாடல்கள் 

முதல்வன் முறையீடு ( 7 )



தாயாகித் தாரமுமாய்த்
தாழ்ந்த நாள் ....  போதாதோ ?
சேயாய்ப் புருடனுமாய்ச்
சென்ற நாள்....... போதாதோ ??

நோயுண்ணவே மெலிந்து
நொந்த நாள்  ..... போதாதோ ?
பேயுண்ணப் பேயாய்ப்
பிறந்த நாள் ....... போதாதோ   ??

ஊன உடல் கூன் குருடாய்
உற்ற நாள் ........... போதாதோ ?
ஈனப் புசிப்பில் 
இளைத்த நாள்  ..... போதாதோ ??

பட்ட களையும் 
பரிதவிப்பும் ...  போதாதோ ?
கெட்ட நாள் கெட்டேனென்று
கேளாதும்  ........ போதாதோ ??

கன்னி வன நாதா.
கன்னி வன நாதா  ..... 

இன்னும் வரும்...


No comments:

Post a Comment