Tuesday, 23 June 2020

ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டோத்திரம். ( 12 )

ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டோத்திரம். 12
{தமிழ் விளக்கத்துடன்}



100. ஓம் சுப்ரமண்யாய நமஹ: -
சிறப்பான பிரம்ம ஸ்வரூபம் பெற்று உலகம் முழுவதற்கும் ஞான செல்வம் அருளும் ஸ்வாமி.
101. ஓம் குஹாய நமஹ: -
மாயையால் எல்லாவற்றையும் மறைப்பவர்.
102. ஓம் ப்ரீதாய நமஹ: -
பக்தகளிட்த்தில் மிகவும் அன்பாக இருப்பவர்
103. ஓம் ப்ரம்மண்யாய நமஹ: -
தவத்திற்கும் வேதத்திற்கும் சான்றோர்களுக்கும் அனுகூலமாக இருப்பவர்.
104. ஓம் ப்ராஹ்மண ப்ரியாய நமஹ: -
ப்ராம்னர்க்களுக்கு பிரியமுள்ளவர்.
105. ஓம் வம்ச விருத்தி கராய நமஹ: -
பக்தர்களின் வம்சத்தை விருத்தி செய்து அருள் புரிபவர்.
106. ஓம் வேத வேத்யாய நமஹ: -
எல்லா வேதங்களையும் நன்கு அறிந்தவர்.
107. ஓம் அக்ஷயபல ப்ரதாய நமஹ: -
பக்தர்களுக்குக் குறைவற்ற நலங்களை தருபவர்.
108. ஓம் ஸ்ரீ வள்ளி தேவசேனா சமேத ஓம் ஸ்ரீ சுப்ரமண்யாய நமஹ: -
வள்ளி தேவசேனையுடன் எழுந்தருளியிருக்கும் சுப்ரமண்ய ஸ்வாமிக்கு நமஸ்காரம்.

ரி ஓம் !!!

No comments:

Post a Comment