64. ஓம் கஹானாய நமஹ: -
மற்றவர்களால் அறிய இயலாத ஸ்வரூபமும் சக்தியையும் செயல்களும் கொண்டவர்.
65. ஓம் சந்திர வர்ணாய நமஹ: -
பூரண சந்திரனைப் போன்ற நிறமுள்ளவர்.
66. ஓம் கலாதராய நமஹ: -
சந்திரனின் கலைகளைப் போல் குளிர்ந்த சுபாவமுள்ளவர்.
67. ஓம் மாயாதராய நமஹ: -
மாயையை அடக்கியாள்பவர்.
68. ஓம் மஹாமாயினே நமஹ: -
பக்தர்களுக்கு மாயையைக் கொடுப்பவரும் நீங்குபவருமான ஈஸ்வரன்.
69. ஓம் கைவல்யாய நமஹ: -
ஒன்றேயாகிய கைவல்யம் என்ற முக்தியை அளிப்பவர்.
70. ஓம் சங்கராத்மஜாய நமஹ: -
பரமேஸ்வரனிடம் ஜோதிமயமான ஆத்மாவாக பிறந்தவர்.
71. ஓம் விஸ்வ யோனயே நமஹ:
உலகம் அனைத்திற்கும் பிறப்பிடம்.
72. ஓம் அமேயாத்மனே நமஹ: -
அளவிட இயலாத மகிமையுள்ளவர்.
ஹரி ஓம் !!!

No comments:
Post a Comment