46. ஓம் ஏக வர்ணாய நமஹ: -
ஒரே தத்துவமாகிய பரம்பொருள்.
47. ஓம் த்விவர்ணாய நமஹ: -
சிருஷ்டிக்குக் காரணமான பிரகிருதியாகவும்,புருஷனாகவும் திகழ்பவர்.
48. ஓம் த்ரிவர்ணாய நமஹ: -
சத்வம்,ரஜஸ்,தமஸ் என்ற மூன்று குணங்களுக்கும் அதிபதியாக விளங்குபவர்.
49. ஓம் ஸுமனோஹராய நமஹ: -
அளவு கடந்த ஆனந்த வடிவமாக மனதை கவர்பவர்.
50. ஓம் சதுர் வர்ணாய நமஹ: -
மனம்,புத்தி,சித்தம்,அகங்காரம் என்ற நாங்கு உருவங்களாக இருப்பவர்.
51. ஓம் பஞ்ச வர்ணாய நமஹ: -
பஞ்ச பூதங்களின் வடிவமானவர்.
52. ஓம் ப்ரஜாபதயே நமஹ: -
உயிர்த் தொகுதிகளுக்குத் தலைவர்.அல்லது உலக ஸ்ருஷ்டிக்குக் காரணமாக இருப்பவர்.
53. ஓம் அஹஸ்பதயே நமஹ: -
பகலை உண்டாக்கும் சூரியனைப்போல் மிகுந்த ஒளியுடன் விளங்குபவர்.
54. ஓம் அக்னிகர்ப்பாய நமஹ: -
அக்னியில் பிறந்தவர்.

No comments:
Post a Comment