Thursday, 4 June 2020

ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டோத்திரம் ( 2 )

ஸ்ரீ சுப்பிரமண்ய அஷ்டோத்திரம்.
{தமிழ் விளக்கத்துடன்}*


10. ஓம் த்விஷண்ணேத்ராய நம: -
பன்னிரண்டு விதமான தெய்வீக குணங்களைத் தமது பக்தர்களுக்கு அருளும் மகிமை பெற்ற பன்னிரண்டு கண்களை உடையவர்.

11. ஓம் சக்திதராய நம :-
பராசக்தியின் ஞான சொரூபமாகிய வேல் என்ற ஆயுதத்தைக் கையில் ஏந்தியவர்
.
12. ஓம் பிசிதாச-பிரபஞ்ஜனாய நம: -
பிசாசு, நரமாமிசம் உண்ணும் அரக்கர்கள் போன்றவர்களின் பலத்தைத் தகர்த்து எறிந்து அழிப்பவர்.

13. ஓம் தாரகாஸூர-ஸம் ஹாராய நம: -
தாரகன் என்ற அசுரனை அழித்தவர்.

14. ரக்ஷோபல விமர்த்தனாய நமஹ: -
ராக்ஷஸ சேனையின் பலத்தை அழித்தவர்.

15. ஓம் மத்தாய நமஹ: -
மதம் பிடித்தவர் போல் யுத்தம் செய்பவர்.

16. ஓம் ப்ரமத்தனாய நமஹ: -
மிகவும் வெறி பிடித்தவர் போல் பயங்கரமாக யுத்தம் செய்து எதிரி சேனைகளை அழித்தவர்.{தன்னிடம் சரண் புகுந்தவர்களின் பக்தியில் சிறிதேனும் ஊக்க குறைவு ஏற்பட்டால் அவர்களை காப்பாற்றி கைத்தூக்கிவிடும் இயல்புடையவர்.

17. ஓம் உன்மத்தாய நமஹ: - தனது பராக்கிரமத்தில் மிகவும் தன்னம்பிக்கையுடன் போர் புரிபவர்.அல்லது {யோக நிஷ்டையில் யோகேஸ்வர்ராக இருப்பவர்.}

18. ஓம் ஸுர ஸைன்ய ஸுரக்ஷகாய நமஹ: -
தேவர்களின் சேனையை நன்றாக காப்பாற்றியவர்.

தொடரும் ....

No comments:

Post a Comment