Sunday, 24 May 2020

பட்டினத்தார் - பூரண மாலை ( 10 )

பட்டினத்தார்  பாடல்கள்

பூரணமாலை ( 10 )


பூசையுடன் புவன
    போகமெனும் போக்கியத்தால்
ஆசையுற்றே நானும்
    அறிவழிந்தேன் .................... பூரணமே !  91

படைத்தும் அழித்திடுவாய்
    பார்க்கில் பிரமா எழுத்தைத்
துடைத்துச் சிரஞ்சீயாய்த்
    துலங்குவிப்பாய்................... பூரணமே !   92

மந்திரமாய்ச் சாத்திரமாய்
     மறை நான்காய் நீயிருந்த
தந்திரத்தை  நானறியத்
தகுமோதான்  .........................   பூரணமே !   93

அல்லாய்ப் பகலாய் 
    அனவரத  காலமெனும்
சொல்லாய்ப் பகுத்த
    தொடர்பறியேன் ..............   பூரணமே !   94

நரகம் சுவர்கமென
    நண்ணும் இயரண்டு உண்டாயும்
அரகரா என்பது
அறிகிலேன்  ...........................  பூரணமே !   95

பாவ புண்ணியனென்னும்
     பகுப்பாய் படைத்திங்கு
ஆவலை உண்டாக்கி வைத்த
    அருளறியேன் ...................... பூரணமே !   96

சாந்தமென்றும் கோபமென்றும்
    சாதி பேதங்களென்றும்
பாந்தாமென்றும் புத்தியென்றும்
     படைத்தனையே .................  பூரணமே !  97

பாசம் உடலாய்
     பசு அதுவும் தானுயிராய்
நேசமுடன் நீ பொருளாய்
    நின்றனையே .....................  பூரணமே !  98

ஏதிலடியார் இங்கு
     இயக்கத்தினில் வந்துன்றன்
பாதமதில் தாழப்
    பரிந்தருள்வாய்  .................  பூரணமே !  99

நானே நீ  நீயே நான்
    நாமிரண்டும் ஒன்றானால்
தேனின் ருசியதுபோல்
   தெவிட்டாய் நீ  ....................  பூரணமே !   100

முடிவில் ஒரு சூனியத்தை
    முடித்து நின்று பாராமல்
அடியில் ஒரு சூனியத்தில்
    அலைந்தேனே  ..............      பூரணமே !  101

பூரண மாலை தன்னைப்
    புத்தியுடன் ஓதினோர்க்குத்
தாரணியில் ஞானம்
    தழைப்பிபாய் ....................... பூரணமே !   102


பூரண மாலை  முற்றிற்று !




ஹரி ஓம் !!!


 


    

No comments:

Post a Comment