Wednesday, 20 May 2020

பட்டினதார் - பூரண மாலை ( 6 )

பட்டினத்தார் பாடல்கள்

பூரண மாலை 





மூலவித்தாய் நின்று முளைத்து
     உடல்தோறும் இருந்து
காலன் என வழிக்கும்
கணக்கறியேன்...................பூரணமே !    46

உள்ளும் புறம்புமாய்
      உடலுக்குள்  நீயிருந்தது
எள்ளளவும் நான் அறியாது
     இருந்தேனே.....................பூரணமே !    47

தாயாகித் தந்தையாய்
   தமர் கிளைஞர் சுற்றமெல்லாம்
நீயாகி  நின்ற
    நிலை அறியேன் ..............பூரணமே !    48

விலங்கு புள் ஊர்வன அசரம்
    விண்ணவர் நீற்ச் சாதி மனு
குலங்கள் எழுவகைல் நின்ற
   குறிப்பறியேன்....................பூரணமே !   49

ஆணாகிப் பெண்ணாய்
       அலியாய்  வேற்றுருவாய்
மாணாகி நின்ற
     வகை அறியேன் ...................பூரணமே !    50

வாலையாய்ப் பக்குவமாய்
     வளர்ந்து கிழந்தானாகும்
பாலையாய் நின்ற
    பயனறியேன்........................பூரணமே !    51

பொய்யாய்ப் புவியாய்
    புகழ் வாரிதியாகி
மெய்யாகி நின்ற
வியனறியேன்.............................பூரணமே !   52

பூவாய்  மனமாகிப்
    பொன்னாகி  மாற்றாகி
நாவாய்ச் சொல்லான
நயமறியேன்   .............................பூரணமே !   53

முதலாய் நடுவாகி
    முப்பொருளாய் மூன்றுலகாய்
இதமாகி  நின்ற
   இயலறியேன்........................பூரணமே !   54

ஊணாய் உடலுயிராய்
     உண்ணிநிறைந்த கண்ணொளியாய்
தேனாய்  ருசியான
      திறனறியேன் ..........................பூரணமே !  55

வித்தாய்  மரமாய்
    விளைந்த கனியாய் பூவாய்
சித்தாகி நின்ற
     திறமறியேன் ...........................பூரணமே !  56

ஐவகையும் பெற்று உலக
    அண்ட பகிரண்டமெல்லாம்
தெய்வமென நின்ற
     திறமறியேன்..........................பூரணமே .....57

மனமாய் கனவாகி
    மாயையாய் உள்ளிருந்து
நினைவாகி நின்ற
   நிலையறியேன் ......................பூரணமே ..   58

சக்தி சிவம் இரண்டாய்
   தான் முடிவில் ஒன்றாகி
சித்திரமாய் நின்ற
      திறமறியேன் ..........................பூரணமே !   59

பொறியாய்ப் புலனாகிப்
     பூத பேதப் பிரிவாய்
அறிவாகி நின்ற
    அளவறியேன் .........................பூரணமே !   60





( தொடரும் )















No comments:

Post a Comment