ஜாதிக்காய் – மருத்துவ பயன்கள்
| ஜாதிக்காய் (சாதிக்காய்) துவர்ப்பு மற்றும் காரச் சுவைகள் கொண்டது, வெப்பத் தன்மையானது. சிறு அளவில் ஜாதிக்காய் தினமும் உண்டுவர, உடல் வெப்பத்தை அகற்றும்; இரைப்பை, ஈரல் ஆகியவை பலமாகும்; மனமகிழ்ச்சியை அளிக்கும்; ஆண்மைத் தன்மையைப் பெருக்கும், நடுக்கம், பக்கவாதம் ஆகியவை தீரும். செரிமானத்திறன் மிகுந்து உடல் சுறுசுறுப்பாக இருக்கும். அதிகமாகச் சாப்பிட்டால் மயக்கத்தை ஏற்படுத்தும். |
ஜாதிக்காய் பிரதானமாகக் குழந்தைகளுக்கான மருத்துவத்தில் பயன்படுகிறது. குழந்தைகளுக்கு ஏற்படும் வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, சீதபேதி ஆகியவற்றிற்கு ஜாதிக்காய் முக்கியம். |
ஜாதிக்காய் எண்ணெயை மேல் பூச்சாகத் தடவ, புண்கள், காயங்கள், பாரிசவாயு முதலியவற்றைக் கட்டுப்படுத்தும். மேலும், 2 சொட்டு அளவில் உள்ளுக்குள்; கொடுக்க, சீதபேதி, கழிச்சல் போன்றவையும் கட்டுப்படும். |
ஜாதிக்காய் மலேசியா போன்ற நாடுகளில் இயற்கையாக வளர்கின்ற மரம். இலங்கையிலும், இந்தியாவின் மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளிலும் பயிர் செய்யப்படுகின்றது. அடர் தொகுப்பில் இலைகள் கொண்ட பசுமையான சோலைகளில் காணப்படக்கூடியது. |
ஜாதிக்காய் இலைகள் மாற்றடுக்கில் அமைந்தவை, பெரியவை. ஆண், பெண் பூக்கள் தனித்தனியானவை. காய், சதைப்பற்றுள்ளது. மெல்லிய ஓட்டால் மூடப்பட்டிருக்கும் ஜாதிக்காய் பழங்கள், மிகவும் மணமுள்ளவை. மேலே பழுப்பு நிறமாகவும், உட்புறம் சதைப்பகுதி நிறைந்ததாகவும் இருக்கும். |
| ஜாதிக்காய் தோலை நீக்கி உபயோகிக்கப்படுகின்றது. மேல் தோல் புளிப்பும், துவர்ப்பும் கொண்டது. ஊறுகாய் போடப் பயன்படுகின்றது. சாதிக்காய், குலக்காய் என்கிற பெயர்களும் உண்டு. உலர்ந்த பழங்கள் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கும். |
| வயிற்றுப்போக்கு, சீதபேதி குணமாக குழந்தைகளுக்கு ½ தேக்கரண்டி அளவு தேனில், ஜாதிக்காய் 20 சுற்றுகள் இழைத்து, தினமும் இருவேளைகள், நாக்கில் தடவ வேண்டும். |
பெரியவர்களுக்கு ஜாதிக்காய் பொடியை ½ கிராம், அளவாக பாலில் கலந்து, ஒரு நாளைக்கு 3 வேளைகள் வீதம் சாப்பிட்டுவர வேண்டும். |
| 2 சொட்டு ஜாதிக்காய் எண்ணெயை வலியுள்ள இடத்தில் பூச பல்வலி குணமாகும் |
ஜாதிக்காய் 100 கிராம், சுக்கு 100 கிராம், சீரகம் 300 கிராம், இவற்றை நன்றாகத் தூள் செய்து, பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, உணவுக்கு முன்னர், 2 கிராம் அளவு சாப்பிட்டுவர அஜீரணம் குணமாகும். |
ஜாதிக்காய், சுக்கு ஒவ்வொன்றும் 20 கிராம், சீரகம் 50 கிராம், நன்கு தூளாக்கி வைத்துக்கொண்டு, ½ கிராம் தூளுடன், ¼ தேக்கரண்டி சர்க்கரை கலந்து, உணவுக்கு முன்னர் சாப்பிட குடல்வாயு குணமாகும். |
சாதிக்காயை 10 சுற்றுக்கள் தேனில் உரைத்து, பசையாக்கி, கண்ணைச்சுற்றி பற்றுப்போட கண் கருவளையம் மறையும். |
No comments:
Post a Comment