Saturday, 23 May 2020

பட்டினத்தார் - முதல்வன் முறையீடு, ( 2 )

பட்டினத்தார் பாடல்கள் 

முதல்வன் முறையீடு ( 2 )



மண்ணாசைப் பட்டேனை
மண்ணுண்டு போட்டதடா ... 
பொன்னாசைப் பெண்ணாசைப் 
போகேனே  என்குதே  ! 

மக்கள் சுற்றத்தாசை 
மறக்கேனே என்குதே! 
திக்கரசாம் ஆசையது 
தீரேனே என்குதே !

வித்தை கற்கும் ஆசையது
விட்டொழியேன் என்குதே... 
சித்து கற்கும் ஆசையது ...
சிதையேனே  என்குதே !

மந்திரத்தைல் ஆசை 
மறக்கேனே  என்குதே ! 
சுந்தரத்தில் ஆசை 
துறக்கேனே என்குதே !

கன்னி வன நாதா !
கன்னி வன நாதா  !! 


இன்னும் வரும் !


No comments:

Post a Comment