பட்டினத்தார் பாடல்கள்
பூரண மாலை ( 8 )
உருப் பேதமின்றி
உயர்ந்த சப்த பேதமாய்க்
குருப் பேதமாய் வந்த
குணம் அறியேன் ..................................... பூரணமே ! 71
சட் சமய பேதங்கள்
தான் வகுத்துப் பின்னுமொரு
உட் சமயம் உண்டென்று
உரைத்தனையே ........................................பூரணமே ! 72
முப்பத்து இரண்டு உறுப்பாய்
நுனைந்து படைத்து உள்ளிருந்த
செப்படி வித்தைத்
திறமறியேன் ............................................ பூரணமே ! 73
என்னதான் கற்றாலென் ?
எப்பொருமும் பெற்றாலென் ?
உன்னை அறியாதார்
உய்வாரோ ? ............................................ பூரணமே ! 74
கற்றறிவோம் என்பார்
காணார்கள் உன் பதத்தை !
பெற்றறியார் தங்களுக்கு
பிறப்பறுமோ ........................................ பூரணமே ! 75
வான் என்பார் அண்டமென்பார்
வாய் ஞானமே பேசி
தான் என்பார் வீணர்
தனை அறியார்..... ................................ பூரணமே ! 76
ஆதி என்பார் அந்தமென்பார்
அதற்குள் நடுவாயிருந்த
சோதி என்பார் நாதத்
தொழில் அறியார் .................................... பூரணமே ! 77
மூச்சென்பார் உள்ளமென்பார்
மோனமெனும் மோட்சமென்பார்
பேச்சென்பார் உன்னுடைய
பேரறியார் ............................................... பூரணமே ! 78
பரமென்பார் பானுவென்பார்
பாழ்வெளியாய் நின்ற
வரமென்பார் உந்தன்
வழியறியார் ................................... பூரணமே ! 79
எத்தனை பேரோ எடுத்தெடுத்து
தான் உரைத்தார்
அத்தனைப் பேர்க்கு ஒன்றானது
அறிகிலேன் ..................................... பூரணமே ! 80
தொடரும் ..........


No comments:
Post a Comment