Saturday, 2 May 2020

தர்ப்பணம்


தர்ப்பணம் 
அமர்தல்
நீராடி உலர்ந்த ஆடை அணிந்து
கிழக்கு நோக்கி, தரையில்
அமராது, ( 1 ) தர்பை பாய் ( அ )
( 2 ) பலகை ( அ )  ( 3 ) துணி விரித்து
அமர்தல் வேண்டும்.
  ( மகளிர் ஒரு வெற்றிலையில் மஞ்சள்
பிள்ளையார் பிடித்து வைத்து, குங்குமப்
பொட்டிட்டு, பூ வைத்து, அரிசி மாவில் 
ஓம் என கோலமிட்டு, உட்காரும்
இடத்திற்கு வலதுபக்கம் வைக்கவும் )
பவித்ரம் அணிதல்
தர்பையில் மோதிரம் செய்து
வலது கை மோதிர விரலில் 
அணிந்து கொள்ள வேண்டும்.
சட்டம் அமைத்தல்


6 நீளமான தர்பைகளை மேற்கண்டவாறு
அமைத்துக் கொள்ளவேண்டும் 
பிரபஞ்ச சக்தி
ஓம்காரம் மூன்று முறை 
சொல்லவும்
குரு ஸ்துதி
ஓம்
குருர் பிரம்மா
குருர் விஷ்ணு
குருர் தேவோ 
மஹேஸ்வரஹ !
குரு சாக்ஷாத்
பரப் பிரம்மா
தஸ்மை 
ஸ்ரீ குரவே நமஹ !
அண்ட சராசர 
குரு மஹா தேவர்களுக்கு
அரோஹரா ! 
அங்க சுத்தி, கர சுத்தி
ஆம் அங்குஷ்ட்டாப்யாம் நமஹ
ஓம் ஹ்ரீம் தர்ஜ நீப்யாம் நமஹ
க்ரோம் மத்ய மாப்யாம் நமஹ
ஆம் அநாமிகாப்யாம் நமஹ
ஹ்ரீம் கனிஷ்டிகாப்யாம் நமஹ
க்ரோம் கரதல கரப்ருஷ்டாப்யாம் நமஹ
க்ரோம் கரதல கரப்ருஷ்டாப்யாம் நமஹ
க்ரோம் கரதல கரப்ருஷ்டாப்யாம் நமஹ
க்ரோம் கரதல கரப்ருஷ்டாப்யாம் நமஹ
ஆம் ஹ்ருதயாய நமஹ
ஹ்ரீம் சிரஸே ஸ்வாஹா
க்ரோம் சிகாயை வஷ்ட்
ஆம் கவசாய ஹீம்
ஹ்ரீம் நேத்ராயாய வௌஷட்
க்ரோம் அஸ்த்ராய பட்
ஓம் பூர்புவஸ்ஸீ வரோம் இதி திக்பந்த :
விநாயகர் துதி
ஓம் கணானா(ஆ)ம்  தூவா கணபதி
               ஹீம் அவா மஹே
கவீம் கவீம்நாம் 
         முபவச்ர வஸ்தவம்
ஜேஸ்டா ராஜம்
        பிரம்மனாம் பிரம்மன ஸ்பதன்
ஆனஸ்ரன் வன்னுதி 
        பிஸ்ஸீத சாதனம்
ஓம் கணாதிபதயே நமஹ !
ஐந்து கரத்தனை
ஆனை முகத்தினை
இந்தின்
இளம்பிறை போலும்
எயிற்றனை
நந்தி மகன் தனை
ஞானக் கொழுந்தினை
புந்தியில் வைத்து
அடி போற்றுகின்றேனே ! 
ஓம் 
  ஸ்ரீ விநாயகப் பெருமான் திருவடிகள்
      போற்றி போற்றி !
வினைகளையும் விக்கினங்களயும்
   கலைந்து எறியும் 
     விநாயகப் பெருமான் திருவடிகள்
         போற்றி போற்றி !
விதிக்கு விதி செய்யும்
     விநாயகப் பெருமான் திருவடிகள்
         போற்றி போற்றி !
அவித்யா மாயை நீக்கி
   வித்யா ரூபனாக்கும்
     விநாயகப் பெருமான் திருவடிகள்
         போற்றி போற்றி !
அருகம்புல்லை ஏற்று
 அனைத்து நலங்களையும் நல்கும்
    ஆனை முகத்தோன் திருவடிகள்
      போற்றி போற்றி !
அருகம்புல் அல்லது ஒரு புஷ்பத்தை
விநாயகருக்கு அர்ச்சிக்கவும் !
சங்கல்பம் 
வலது தொடையில், முட்டிக்கு அருகில்,
இடது உள்ளங்கை வானத்தை நோக்கி
இருக்குமாறு வைத்து, வலது 
உள்ளங்கையை, இடது ஊள்ளங்கையில்
படிய வைத்து, சத்தியப் பிரமாணம்
செய்தல் 
ஓம் ஸ்ரீமந் நாராயண மூர்த்தியே !
வைகுண்டத்தில் வாழும்
வவைகுண்ட வாசனே !
ஸ்ரீதேவி, பூதேவி, ஸ்ரீ ரெங்கநாயகி தாயார்
சமேத ஸ்ரீ ரங்கநாதனே !
ஸ்ரீரங்கத்தில் பள்ளிகொண்டேனே !
எங்களின்,
எளிய தர்ப்பண பூஜையில் எழுந்தருளி
குற்றம் குறைகள் ஏது ஏற்படாத
வண்ணம் காத்து துணை நின்று,
வழி நடத்தி, முறையான பலன்கள்
எங்கள் பித்ருக்களைச் சென்றடைய
உங்களின் திருவடிகளைச் 
சரணடைகின்றேன் !
தர்பைச் சட்டத்தில் பிதுர் மூர்த்திகளை
எழுந்தருளச் செய்தல். 
பிதுர் தேவர்களே ! பிதுர் தேவதைகளே !
எங்களின் தர்பைச் சட்டத்தில்,
சூக்ஷும தேகத்தில் எழுந்தருளி,
முறையான பலன்கள் 
பிதுர்களின் திருவடிகளைச் 
சென்றடைய, உங்களின் திருவடிகளைப்
பணிகின்றோம் !
பூணூல் கலைமாற்றம் 
செய்துகொள்ள வேண்டும் 
தர்ப்பணம் 
சட்டத்தில்
 1ல் இருந்து 6 வரை தந்தை வழி
1. தகப்பனாருக்கு:
   ……. கோத்திரம், ………குலம்,     
……….என்ற பெயருடைய என்
தகப்பனார் நினைவோடு,
நெடுங்கிடையாய் நாமளிக்கும்
நீர் தாரை எள்ளோடு,
நுணல் தர்பை யாவையுமாய்,
மூத்தார் துதி பாடி,
மூலவரை யாம் பணிவோம் 
என்று சொல்லி,
மூன்று முறை,
 " என் தகப்பனாருக்கு 
தில தர்ப்பணம் சமர்பயாமி"
என்று கூறிக்கொண்டு, 
கட்டை விரலுக்கும், ஆட்காட்டி 
விரலுக்கும் இடைப்பட்ட வழியில்
எள்ளும், தண்ணீரும், 1  என்ற எண்
உள்ள இடத்தில் விழுமாறு 
செய்ய வேண்டும்.
2. தாத்தாவிற்கு :
( தாத்தாவின் பெயர் தெரியாதவர்கள்
கோவிந்தன், கோவாலன், மாதவன், 
என்று இறைவனின் நாமத்தில்
ஒன்றை சொல்லிக்கொள்ளலாம் )
   ……. கோத்திரம், ………குலம்,     
……….என்ற பெயருடைய என் தந்தை வழி
தாத்தாவின் நினைவோடு,
நெடுங்கிடையாய் நாமளிக்கும்
நீர் தாரை எள்ளோடு,
நுணல் தர்பை யாவையுமாய்,
மூத்தார் துதி பாடி,
மூலவரை யாம் பணிவோம் 
என்று சொல்லி,
மூன்று முறை,
 " என் தாத்தாவிற்க்கு 
தில தர்ப்பணம் சமர்பயாமி"
என்று கூறிக்கொண்டு, 
கட்டை விரலுக்கும், ஆட்காட்டி 
விரலுக்கும் இடைப்பட்ட வழியில்
எள்ளும், தண்ணீரும், 2  என்ற எண்
உள்ள இடத்தில் விழுமாறு 
செய்ய வேண்டும்.
3. முப்பாட்டனாருக்கு :
( முப்பாட்டனாரின் பெயர் தெரியாதவர்கள்
கோவிந்தன், கோபாலன், மாதவன், 
என்று இறைவனின் நாமத்தில்
ஒன்றை சொல்லிக்கொள்ளலாம் )
 ……. கோத்திரம், ………குலம்,     
……….என்ற பெயருடைய என் தந்தை வழி
முப்பாட்டனாரின் நினைவோடு,
நெடுங்கிடையாய் நாமளிக்கும்
நீர் தாரை எள்ளோடு,
நுணல் தர்பை யாவையுமாய்,
மூத்தார் துதி பாடி,
மூலவரை யாம் பணிவோம் 
என்று சொல்லி,
மூன்று முறை,
 " என் முப்பாட்டனாருக்கு
தில தர்ப்பணம் சமர்பயாமி"
என்று கூறிக்கொண்டு, 
கட்டை விரலுக்கும், ஆட்காட்டி 
விரலுக்கும் இடைப்பட்ட வழியில்
எள்ளும், தண்ணீரும், 3  என்ற எண்
உள்ள இடத்தில் விழுமாறு 
செய்ய வேண்டும்.
4. தாயாருக்கு :
 ……. கோத்திரம், ………குலம்,     
……….என்ற பெயருடைய என்
தாயாரின் நினைவோடு,
நெடுங்கிடையாய் நாமளிக்கும்
நீர் தாரை எள்ளோடு,
நுணல் தர்பை யாவையுமாய்,
மூத்தார் துதி பாடி,
மூலவரை யாம் பணிவோம் 
என்று சொல்லி,
மூன்று முறை,
 " என் தாயாருக்கு 
தில தர்ப்பணம் சமர்பயாமி"
என்று கூறிக்கொண்டு, 
கட்டை விரலுக்கும், ஆட்காட்டி 
விரலுக்கும் இடைப்பட்ட வழியில்
எள்ளும், தண்ணீரும், 4  என்ற எண்
உள்ள இடத்தில் விழுமாறு 
செய்ய வேண்டும்.
5. பாட்டிக்கு :
 ……. கோத்திரம், ………குலம்,     
……….என்ற பெயருடைய என் தந்தை வழி
பாட்டியின் நினைவோடு,
நெடுங்கிடையாய் நாமளிக்கும்
நீர் தாரை எள்ளோடு,
நுணல் தர்பை யாவையுமாய்,
மூத்தார் துதி பாடி,
மூலவரை யாம் பணிவோம் 
என்று சொல்லி,
மூன்று முறை,
 " என் தந்தை வழி பாட்டிக்கு
தில தர்ப்பணம் சமர்பயாமி"
என்று கூறிக்கொண்டு, 
கட்டை விரலுக்கும், ஆட்காட்டி 
விரலுக்கும் இடைப்பட்ட வழியில்
எள்ளும், தண்ணீரும், 5  என்ற எண்
உள்ள இடத்தில் விழுமாறு 
செய்ய வேண்டும்.
6. முப்பாட்டிக்கு :
 ……. கோத்திரம், ………குலம்,     
……….என்ற பெயருடைய என் தந்தை வழி
முப்பாட்டியின் நினைவோடு,
நெடுங்கிடையாய் நாமளிக்கும்
நீர் தாரை எள்ளோடு,
நுணல் தர்பை யாவையுமாய்,
மூத்தார் துதி பாடி,
மூலவரை யாம் பணிவோம் 
என்று சொல்லி,
மூன்று முறை,
 " என் தந்தை வழி முப்பாட்டிக்கு
தில தர்ப்பணம் சமர்பயாமி"
என்று கூறிக்கொண்டு, 
கட்டை விரலுக்கும், ஆட்காட்டி 
விரலுக்கும் இடைப்பட்ட வழியில்
எள்ளும், தண்ணீரும், 6  என்ற எண்
உள்ள இடத்தில் விழுமாறு 
செய்ய வேண்டும்.
 7ல் இருந்து 12 வரை தாய் வழி
7. தாயாரின் தந்தைக்கு :
…….கோத்திரம்( தெரியாவிட்டால் விட்டுவிடலாம் )
…………  குலம்.
………… என்ற பெயருடைய 
( பெயர் தெரியாவிட்டால், எதாவது
இறைவனின் நாமம் )
என் தாயாரின் தகப்பனாரின் நினைவோடு
நெடுங்கிடையாய் நாமளிக்கும்
நீர் தாரை எள்ளோடு,
நுணல் தர்பை யாவையுமாய்,
மூத்தார் துதி பாடி,
மூலவரை யாம் பணிவோம் 
என்று சொல்லி,
மூன்று முறை,
 " என் தாயாரின் தகப்பனாருக்கு
தில தர்ப்பணம் சமர்பயாமி"
என்று கூறிக்கொண்டு, 
கட்டை விரலுக்கும், ஆட்காட்டி 
விரலுக்கும் இடைப்பட்ட வழியில்
எள்ளும், தண்ணீரும், 7  என்ற எண்
உள்ள இடத்தில் விழுமாறு 
செய்ய வேண்டும்.
8. தாயாரின் தாத்தாவுக்கு :
…….கோத்திரம்( தெரியாவிட்டால் விட்டுவிடலாம் )
…………  குலம்.
………… என்ற பெயருடைய 
( பெயர் தெரியாவிட்டால், எதாவது இறைவனின் நாமம் )
என் தாயாரின் தகப்பனார் வழி 
தாத்தாவின் நினைவோடு
நெடுங்கிடையாய் நாமளிக்கும்
நீர் தாரை எள்ளோடு,
நுணல் தர்பை யாவையுமாய்,
மூத்தார் துதி பாடி,
மூலவரை யாம் பணிவோம் 
என்று சொல்லி,
மூன்று முறை,
 " என் தாயாரின் தகப்பன் வழி  
தாத்தாவின் நினைவோடு
தில தர்ப்பணம் சமர்பயாமி"
என்று கூறிக்கொண்டு, 
கட்டை விரலுக்கும், ஆட்காட்டி 
விரலுக்கும் இடைப்பட்ட வழியில்
எள்ளும், தண்ணீரும், 8  என்ற எண்
உள்ள இடத்தில் விழுமாறு 
செய்ய வேண்டும்.
9. தாயாரின் முப்பாட்டனாருக்கு :
…….கோத்திரம்( தெரியாவிட்டால் விட்டுவிடலாம் )
…………  குலம்.
………… என்ற பெயருடைய 
( பெயர் தெரியாவிட்டால், எதாவது
இறைவனின் நாமம் )
என் தாயாரின் தகப்பனார் வழி 
முப்பாட்டனாரின் நினைவோடு
நெடுங்கிடையாய் நாமளிக்கும்
நீர் தாரை எள்ளோடு,
நுணல் தர்பை யாவையுமாய்,
மூத்தார் துதி பாடி,
மூலவரை யாம் பணிவோம் 
என்று சொல்லி,
மூன்று முறை,
 " என் தாயாரின் தகப்பன் வழி  
முப்பாட்டனாரின் நினைவோடு
தில தர்ப்பணம் சமர்பயாமி"
என்று கூறிக்கொண்டு, 
கட்டை விரலுக்கும், ஆட்காட்டி 
விரலுக்கும் இடைப்பட்ட வழியில்
எள்ளும், தண்ணீரும், 9  என்ற எண்
உள்ள இடத்தில் விழுமாறு 
செய்ய வேண்டும்.
10. தாயாரின் தாய்க்கு :
…….கோத்திரம்( தெரியாவிட்டால் விட்டுவிடலாம் )
…………  குலம்.
………… என்ற பெயருடைய 
( பெயர் தெரியாவிட்டால், எதாவது இறைவியின்
 நாமம் )
என் தாயாரின் தாயின் நினைவோடு
நெடுங்கிடையாய் நாமளிக்கும்
நீர் தாரை எள்ளோடு,
நுணல் தர்பை யாவையுமாய்,
மூத்தார் துதி பாடி,
மூலவரை யாம் பணிவோம் 
என்று சொல்லி,
மூன்று முறை,
 " என் தாயாரின் தாய்க்கு
தில தர்ப்பணம் சமர்பயாமி"
என்று கூறிக்கொண்டு, 
கட்டை விரலுக்கும், ஆட்காட்டி 
விரலுக்கும் இடைப்பட்ட வழியில்
எள்ளும், தண்ணீரும், 10  என்ற எண்
உள்ள இடத்தில் விழுமாறு 
செய்ய வேண்டும்.
11. தாயாரின் பாட்டிக்கு :
…….கோத்திரம்( தெரியாவிட்டால் விட்டுவிடலாம் )
…………  குலம்.
………… என்ற பெயருடைய 
( பெயர் தெரியாவிட்டால், எதாவது
இறைவியின் நாமம் )
என் தாயாரின் பாட்டியின் நினைவோடு
நெடுங்கிடையாய் நாமளிக்கும்
நீர் தாரை எள்ளோடு,
நுணல் தர்பை யாவையுமாய்,
மூத்தார் துதி பாடி,
மூலவரை யாம் பணிவோம் 
என்று சொல்லி,
மூன்று முறை,
 " என் தாயாரின் பாட்டிக்கு
தில தர்ப்பணம் சமர்பயாமி"
என்று கூறிக்கொண்டு, 
கட்டை விரலுக்கும், ஆட்காட்டி 
விரலுக்கும் இடைப்பட்ட வழியில்
எள்ளும், தண்ணீரும், 11  என்ற எண்
உள்ள இடத்தில் விழுமாறு 
செய்ய வேண்டும்.
12. தாயாரின் முப்பாட்டிக்கு :
…….கோத்திரம்( தெரியாவிட்டால் விட்டுவிடலாம் )
…………  குலம்.
………… என்ற பெயருடைய 
( பெயர் தெரியாவிட்டால், எதாவது
இறைவியின் நாமம் )
என் தாயாரின் முப்பாட்டியின் நினைவோடு
நெடுங்கிடையாய் நாமளிக்கும்
நீர் தாரை எள்ளோடு,
நுணல் தர்பை யாவையுமாய்,
மூத்தார் துதி பாடி,
மூலவரை யாம் பணிவோம் 
என்று சொல்லி,
மூன்று முறை,
 " என் தாயாரின் முப்பாட்டிக்கு
தில தர்ப்பணம் சமர்பயாமி"
என்று கூறிக்கொண்டு, 
கட்டை விரலுக்கும், ஆட்காட்டி 
விரலுக்கும் இடைப்பட்ட வழியில்
எள்ளும், தண்ணீரும், 12  என்ற எண்
உள்ள இடத்தில் விழுமாறு 
செய்ய வேண்டும்.
காருண்ய தர்ப்பணம்
1. 64 தலைமுறையைச் சார்ந்த பித்ருக்களுக்கு
2. அகால மரணமடைந்த உயிர்களுக்கு
3. நினைவு கோரமுடியாத, மறைந்த உயிர்களுக்கு
4. பிறவிக்குள் வரமுடியாமல் 
தவித்துக் கொண்டிருக்கும் உயிர்களுக்கு
5.பாரதீய தீப கற்பம்,
போதி பாத மண்டலம்,
தச சாந்தி தீப மண்டலம்,
போயாங்கு தீப மண்டலம்,
சங்கநாத தீப மண்டலம்,
காரடையான் தீப மண்டலம்,
கூட்டெலும்பு கூட்டு மண்டலம்,
இல்லி கண்ணி தீப மண்டலம்,
கர்ஜனை சாதனை தீப மண்டலம்,
சுங்க பட்டாணி தீப மண்டலம்,
சுகர்னோ நாதி தீப மண்டலம்,
பிரவாக நீர்த்தாரை தீப மண்டலம்,
நீள் நதி நில மண்டலம்,
பனி பூ சங்கம மண்டலம்,
குதியாட்ட கூர் மண்டலம்,
பூனைக்கண் தீப மண்டலம்,
சப்த தீப மண்டலம்,
தோனி சாதனை தீப மண்டலம்,
கந்தபுரி மண்டலம்,
வல்லநாடி மண்டலம், 
ஐக்கிய சித்தி மண்டலம், 
ஆகிய மண்டலங்களில் வாழும் பிதுர்களுக்கு,
6. சிறப்பான உயிகளுக்கு,
7. இறை நிலை அடையாத ஓரறிவு முதல்
ஆறறிவு வரையிலான மறைந்த 
அனைத்து ஜீவர்களுக்கும்,
8, வசு, ருத்ர, ஆதித்ய பித்ரு மண்டலங்களில்
வாழும் பிதுர்கள், பிதுர் தேவர்கல், பிதுர்
தேவதைகள் அனைவருக்கும் என்று கூறி,
ஓம்
தத்தத் கோத்ராந்
தத்தத் ஸர்மண வஷு வஷு
ஸ்வீ ரூபாந் பித்ருப்ய மாதுலாதி
வர்கத் வயா வஸிஷ்டாந் ஸர்வாந்
காருண்ய, பித்ரூந் ஸ்வதா நமஸ் 
என்ற மந்திரத்தை, ஒவ்வொரு
முறையும் சொல்லி, 
மூன்று முறை 
தர்பயாமி, தர்பயாமி, தர்பயாமி
என்று கூறி
எள் நீர் வார்க்கவும் .
சேவித்தல்
தர்பை சட்டத்தைத் தொட்டு சேவிக்கவும்
பூணூலை பழைய நிலைக்கு
கலைமாற்றம் செய்துகொள்ளவும்.
வேண்டுதலை குருவின் திருவடிக்கு
சமர்ப்பித்தல்.
பரம்பொருளே!
இரை அருளே !
அனைத்திலும் நின்று
எங்களை வழி நடத்தும்
இறை மஹா சக்தியே !
சற்குரு நாதனே ! 
ஸ்ரீலஸ்ரீ வேங்கடராம சித்த ஈசனே !
இடியாப்ப சித்த ஈசனின் 
வழித் தோன்றலே!
எது சரியோ அதுவே நடக்கட்டும்
அது நல்லதோ அதுவே கிடைக்கட்டும்
எங்களுக்கு மட்டுமல்ல,
எல்லா உயிர்களுக்கும்
அவ்வாறே நடக்கட்டும் !
அவ்வாறு செய்வதற்கு
நன்றி குருதேவா!
நன்றி ! நன்றி !! நன்றி !!!


ஹரி ஓம் !!!














No comments:

Post a Comment