பட்டினத்தார் பாடல்கள்
பூரண மாலை
கருவாய் உருவாய்க் கலந்து
உலகெலாம் நீயாய்
அருவாகி நின்றது
அறிகிலேன் ............. பூரணமே ! 31
செம்பொற் கமலத் திருவடியைப்
போற்றாமல்
பம்பை கொட்டா ஆடும்
பிசாசானேன் ............. பூரணமே ! 32
எனக்குள்ளே நீயிருக்க
உனக்குள்ளே நானிருக்க
மனக் கவலைத் தீர
வரம் அருள்வாய் ............. பூரணமே 33
எழுவகைத் தோற்றத்தில்
இருந்து விளையாடினதைப்
பழுதறவே பாராமல்
பயன் அழிந்தேன் ............... பூரணமே ! 34
சாதி பேதங்கள் தமை
அறிய மாட்டாமல்
வாதனையால் நின்று
மயங்கினேன் ............... பூரணமே ! 35
குலம் ஒன்றாய் நீ படைத்த
குறையை அறியாமல் யான்
மல பாண்டத்துள் இருந்து
மயங்கினேன் ....................... பூரணமே ! 36
அண்ட பிண்டமெல்லாம்
அணுவுக்கு அணுவாய்
நீ கொண்ட வடிவின்
குறிப்பறியேன் .................. பூரணமே !! 37
சகத்திரத்தின் மேலிருக்கும்
சற்குருவைப் போற்றாமல்
அகத்தினுடை ஆணவத்தால்
அறிவிழந்தேன் ....................... பூரணமே ! 38
ஐந்து பொறியை அடக்கி
உனைப் போற்றாமல்
நைந்துருகி நிஞ்சம்
நடுங்கினேன் ...........................பூரணமே ! 39
என்னைத் திருக்கூத்தால்
இப்படி நீ ஆட்டுவித்தாய்
உன்னை அறியாது
உடல் அழிந்தேன்.....................பூரணமே ! 40
நரம்புதசை தோல் எலும்பு
நாற்றத்துக்குள் இருந்து
வரம்பறிய மாட்டாமல்
மயங்கினேன்.............................பூரணமே ! 41
சிலந்தியுடை நூல் போல்
சீவசெந்துக்குள் இருந்த
நலந்தனைப் பாராமல்
நலமிழந்தேன் .....................பூரணமே ! 42
குருவாய்ப் பரமாகிக்
குடிலை சத்தி நாதவிந்தாய்
அருவாய் உருவானது
அறிகிலேன் .......................... பூரணமே .. 43
ஒளியாய்க் கதிர்மதியாய்
உள்ளிருவாய் அக்கினியாய்
வெளியாகி நின்ற
வியன் அறியேன்........................பூரணமே ! 44
இடையாகிப் பிங்கலையாய்
எழுந்தசுழுமுனையாய்
உடலுயிராய் நீயிருந்த
உளவறியேன்.......................................பூரணமே ! 45
( தொடரும் )

No comments:
Post a Comment