Saturday, 23 May 2020

பட்டினத்தார் - பூரண மாலை ( 9 )

பட்டினத்தார்  பாடல்கள்


பூரண மாலை ( 9 )



நகாரம் மகாரம் என்பார் 
   நடுவே  சிகாரம் என்பார் 
வகாரம் யகாரம் என்பார் 
   வகையறியார்  ...................  பூரணமே !  81

மகத்துவமாய் காம
   மயக்கத்துக்குள் இருந்து 
பகுத்தறிய மாட்டாமல் 
   பயன் அழிந்தேன் .................பூரணமே !   82

உண்மைப் பொருளை 
   உகத்திருந்து பாராமல் 
பெண் மயக்கத்தாலே 
பிறந்து இறந்தேன் ..................பூரணமே !   83

வாயார வாழ்த்தி
    மகிழ்ந்து உனைத்தான்  போற்றாமல்
அந்தரமாய் நின்று 
   அலைந்தேன் ........................  பூரணமே !   84

சந்திரனை மேகமதுதான் 
  மறைத்த வாறதுபோல் 
பந்தமுடன் யானும் உனைப்
பார்க்கிலேன் ............................  பூரணமே !   85

செந்தாமரைத் தாளை 
   தினந்தினமும் போற்றாமல்
அந்தரமாய் நின்று அங்கு  
   அலைந்தேன்  ......................   பூரணமே !   86

நீர்மேல்  குமிழிபோல்
    நிலையற்ற  காயமிதை 
தாரகம் என்று எண்ணி நான்
   தட்டழிந்தேன் ....................   பூரணமே !   87

நெஞ்சம் உருகி நினைந்து 
    உனைத்தான் போற்றி
நெடு வஞ்சகத்தைப் போக்க
வகை அறியேன் .................... பூரணமே !   88

எள்ளுக்குள் எண்ணெய் போல்
   எங்கும் நிறைந்திருந்தது
உள்ளம் அறியாது 
   உருகினேன்  .......................  பூரணமே !   89

மாயாப் பிரபஞ்ச
   மயக்கத்திலே விழுந்த 
ஓயாச் ச(ஜ)னனம் 
    ஒழித்திலேன்   .................  பூரணமே  !  90



   தொடரும் !!

No comments:

Post a Comment